ஆண்டவரை நினைவுகூறுதல்
REMEMBERING THE LORD 
62-12-09
பிரான்ஹாம் கூடாரம்,
ஜெபர்ஸன்வில், இந்தியானா
அமெரிக்கா.


 
1. நன்றி சகோ. நெவில் அவர்களே. இங்கு வந்துள்ளதைக் குறித்து, சகோ. நெவில் அவர்களே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, உன்னதங்களில் கிறிஸ்து இயேசுவுடன் உட்காரக் கிடைத்த தருணத்திற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சிறிய எண்ணிக்கை என்னை ஒரு போதும் தொல்லைப்படுத்தியதில்லை. உங்களுக்குத் தெரியுமா-? அதிக எண்ணிக்கை எப்பொழுதுமே எனக்கு பயத்தை அளிக்கும். சிறு எண்ணிக்கை உள்ள கூட்டத்தின் மத்தியில் நான் குடும்பத்தில் உள்ளதைப் போன்ற உணர்வை அதிகமாக பெற்றிருப்பது வழக்கம், ஏனெனில் சபையானது சிறிய எண்ணிக்கையை மாத்திரம் கொண்டதாய் இருக்குமென்று நான் நம்புகிறேன். ஆம், இந்த என் கருத்தை உறுதிப்படுத்தும் வேத வாக்கியம் ஒன்று என்னிடம் உண்டு: "பயப்படாதே சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாய் இருக்கிறார்'' (லூக். 12:32), அந்த சிறு மந்தையுடன் நானும், ''பயப்படாதே'' என்று சொன்னவரால் எண்ணப்பட விரும்புகிறேன். இன்றிரவு இங்கு வர நாம் பெற்ற பெரும் பேறுக்காக மிகவும் மகிழ்ச்சி உள்ளவர்களாய் இருக்கிறோம்.
2. பிரசங்கம் செய்ய வேண்டுமெனும் எண்ணத்துடன் நான் வரவில்லை. சற்று முன்பு யாரோ ஒருவர் வீட்டின் வாசலண்டை வந்திருந்தார். அப்பொழுது நான் படித்துக் கொண்டு, பீனிக்ஸிலும் சோனிலும் இனி நிகழவிருக்கும் கூட்டங்களில் பேசுவதற்கென சில தலைப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அந்நேரத்தில், ஆவியானவர் தேவனுடைய நற்காரியங்களினால் என்னைப் போஷித்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது 'முடிவானவர்' (ultimate) என்னும் பொருளைப் பற்றிய கருத்துக்களை நான் தேவனிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்தேன். அச்சமயம் என் மனைவி என்னிடம் வந்து, யாரோ என்னைப் பார்க்க வந்து இருப்பதாகக் கூறினாள். அவள், "இன்றிரவு 'நீங்கள் சபைக்குப் போகிறீர்களா-?'' என்று கேட்டாள்.
3. நான், 'அப்படித் தான் நினைக்கிறேன்,'' என்று பதிலுரைத்தேன். நான் செய்து கொண்டு இருப்பதை ஆவியின் ஆளுகைக்குள் வைக்க முயன்றேன். என் மனைவி மீண்டும் என்னிடம் வந்து, வீட்டுக்கு வந்திருப்பவர் ஜெபத்திற்காக வந்திருக்கும் வியாதிப்பட்ட ஒருவர் என்றாள். "சரி, அப்படியானால் நான் சபைக்குச் சென்று வியாதியஸ்தருக்காக ஜெபித்து விட்டு வருகிறேன்,'' என்று கூறினேன். ஜனங்கள் வியாதிப்பட்டவர்களாய், தேவை உள்ளவர்களாய் இருக்கும் போதே அவர்களை நாம் கூடுமானவரை துரிதமாய் அணுகவேண்டும். தேவனுடைய மகத்தான சுகமளிக்கும் வல்லமையினால் சுகம் பெறுவது எத்தகையது என்பதை வியாதியாயிருந்தவர் அறிவர். அது எவ்வளவு அருமையானது-! எப்பேர்பட்ட சிலாக்கியம்-!
4. வரப்போகும் ஞாயிறன்று, கர்த்தருக்குச் சித்தமானால், சகோ.நெவிலுக்கும் மற்றையோருக்கும் விசேஷமான வேறொன்றும் இல்லை என்றால் எனது கிறிஸ்துமஸ் செய்தியை அளிக்கலாம் என்று உத்தேசித்து உள்ளேன். சிலர் ஜார்ஜியா போன்ற தூரமான இடங்களில் இருந்து வருகின்றனர். எனவே கிறிஸ்துமஸுக்கான பொருட்களை கடைகளில் இருந்து வாங்க ஏற்ற சமயத்தில் அவர்கள் வீடு திரும்ப ஏதுவாய் இருக்கும்.
5. எனது சகோதரி டிலோரெஸ், அடுத்த ஞாயிறன்று. மாலை ஆராதனைக்கு முன்பு, சிறு பிள்ளைகளுக்கு வெகுமதி அளிக்கப் போவதாக பில்லி இப்பொழுது என்னிடம் கூறினான். சிறுவர்களுக்காக சிறிய கிறிஸ்துமஸ் நாடகம் ஒன்றை, அன்று ஆராதனைக்கு முன்பாக நடக்தப் போவதாகக் கூறினார்கள். நான், ''அது ஞாயிறு மாலை அன்று தானே-?'' என்று கேட்டேன்,
அவர்கள், "ஆம்'' என்றனர்.
நான், "அப்படியானால் அது ஆராதனையுடன் மோதாது,' என்றேன்.
6. பாருங்கள், அடுத்த வாரம் செவ்வாய், கிறிஸ்துமஸு-க்கு முந்தின நாளாகும். ஜனங்கள் கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள் வீடு திரும்ப விரும்புவார்கள். திங்களன்று... ஆம், இரண்டு வாரங்கள் உள்ளன. ஆது சரி, கிறிஸ்துமஸு-க்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன என்பது சரியாகம். எனவே இன்றிரவு உங்கள் மத்தியில் வந்து, சகோ.நெவிலுக்கு வேறு விசேஷம் ஒன்றும் இல்லாது இருக்குமானால், கர்த்தருக்கு சித்தமானால். எனது கிறிஸ்துமஸ் செய்தியை அளிக்கப் போகிறேன் என்று உங்களிடம் அறிவிக்கலாம் என்று நினைத்தேன். எனது கிறிஸ்துமஸ் செய்தியையும் ஈஸ்டர் செய்தியையும் சபைக்கு அளிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் -- எதைக் கூற வேண்டுமென்று தேவன் என் இருதயத்தில் அருளுகிறாரோ, அதை. கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த ஞாயிறு காலையன்று, கிறிஸ்துமஸ் செய்தியை அளிப்பேன்.
7. மாலைக்கு பதிலாக காலையிலேயே அதை நான் பிரசங்கிக்க விரும்பும் காரணம் என்னவெனில், தூரத்திலிருந்து வந்திருப்பவர்கள் பிரயாணம் செய்து வீடு திரும்ப, பகல் நேரம் முழுவதும் அவர்களுக்கு இருக்கும். மாலையில் அதை வைப்பது நன்று. சூரிய அஸ்தமனத்தின் பின்பு, மாலையில் நடக்கும் ஆராதனை எனக்கு மிகப்பிரியம். குளிர்ச்சியான மாலை வேளையில் கர்த்தர் ஏதேன் தோட்டத்துக்கு வந்து ஆதாமுடன் பேசினார். எனக்கு மாலை ஆராதனை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இங்குள்ள சூழ்நிலைபின் நிமித்தமாக, காலையில் அதை நடத்துவதே நல்லது. ஜனங்கள் வீடு திரும்ப அது ஏதுவாய் இருக்கும்.
8. கூடாரமானது விரிவுபடுத்தப்பட்டு, இன்னும் அதிக இடவசதி இருக்குமென்று கேட்கும் போது, நான் மிகவும் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். மிகுந்த பிரயாசங்களுக்குப் பிறகே எங்களுக்கு அதற்கென அனுமதி கிடைத்தது. சகோ. பாஸ்வர்த் நகைச்சுவை மிகுந்தவர். அவர், "அழுகிற பிள்ளைக்கே பால் கிடைக்கும்," என்று கூறுவார். எனவே எப்பொழுதாகிலும் ஒரு முறை அழுவது பயன் தரக் கூடியதாயுள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்-?
9. சகோ.அந்தோணியும் அவருடைய கூட்டாளிகளும் அருளின அருமையான இசையை நான் பாராட்டுகிறேன். நான் உள்ளே நுழையும் போது. அவர்கள் இசைத்த இசையைக் கேட்டேன். அவர்கள் உபயோகித்த இசைக் கருவிகள் 'டிரம் பட்டுகள்' (Trumpets). எனது பிள்ளைகளில் ஒருவராவது டிரம்பட்டு வாசிக்க ஊதி இசைக்கும் அந்த இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினேன்
10. என் மகள் பெக்கி சிறுமியாயிருந்த போது பியானோ வாசிக்க கற்றுக் கொள்ளத் தொடங்கினாள். இப்பொழுது அதை விட்டுவிட வேண்டுமென்று அவள் நினைக்கிறாள். ஏனெனில் அவளுடைய உபாத்தியாயர், அவள் கிறிஸ்தவ பாடல்களை வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமானால், முதலில் மேல் நாட்டு கர்நாடக சங்கீதத்தை (Classical Music) பயில வேண்டுமென்று கூறினாராம். அவள் அவ்வளவு தூரம் வந்து விட்டு, "நான் விட்டுவிடப் போகிறேன்" என்கிறாள். குழந்தைகள் பிரச்சினைக்கு உரியவர்கள். எவ்வாறாயினும், அதற்கென தேவனுடைய அழைப்பு முதலாவது இருக்க வேண்டும். அவளுடைய சகோதரி சாராள் அவளை வென்று விடுவாள் என்று நினைக்கிறேன். அவள் யாரிடமும் ஒரு முறை கூட பாடம் பயிலவில்லை. இப்படி இயற்கையாக அவளுக்குத் திறமை இருக்குமானால், தேவனுடைய அழைப்பு அவளுக்கு மேலானதாக இருக்கும்.
11. எனக்கு டிரம்பட் என்றால் மிகவும் பிரியம். அன்று அந்த கூடாரத்தை அந்த மூலையில் பிரதிஷ்டை செய்த போது, அந்த மூலைக்கல்லில் தேவனுடைய வார்த்தையை எழுதி வைத்த போது, அரை நாள் பூராவும் டிரம்பட்டுகள், 
"மீட்பர் மரித்த குருசண்டை, 
நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை. 
இரத்தத்தால் மன்னிப்பு அடைந்தேன்' 
என்னும் பாட்டை முழங்கிக் கொண்டிருந்தன.
12. ஒரு இரவு, திரித்துவ மெதோடிஸ்டு சபையில் டாக்டர்.மாரிசன் இருந்த போது, அந்த நாள் என் நினைவுக்கு வருகிறது. என் வயதுள்ளவர்கள், அந்த பரிசுத்தவான் டாக்டர்.மாரிசனை அறிந்திருப்பீர்கள். அவருடைய மறைவினால் ஆஸ்பரி மகத்தான ஒருவரை இழந்து விட்டது. அவருடைய பிரசங்கத்தைக் கேட்க எனக்கு மிகவும் விருப்பம். ஒரு நாள் அதற்காக நான் திரித்துவ மெதோடிஸ்டு சபைக்கு சென்றிருந்தேன். அன்றிரவு நானும் என் மனைவியும் உள்ளே நுழையப் போகும் சமயத்தில், இரண்டு பையன்கள் தாழ்வாரத்திற்கு வந்து, தங்கள் டிரம்பட்டுகளை இப்படி பிடித்துக் கொண்டு, "மீட்பர் மரித்த குரு சண்டை' என்னும் பாட்டை இசைத்தனர். அப்பொழுது உச்சியிலிருந்த பெரிய சிலுவை சுழன்று கொண்டு இருந்தது. நான் வீதியில் நின்று கொண்டே அந்த பாட்டைக் கேட்டு, என் கரங்களை உயர்த்தி, தேவனை ஸ்தோத்தரிக்கத் கொடங்கினேன். அவ்வாறு என்னால் செய்யாமல் இருக்க முடியவில்லை.
13. மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனுக்குள் ஒருவித உணர்ச்சி உள்ளது. அது துடிக்கும் போது, ஏதாவதொன்று நிகழத்தான் வேண்டும். ஓ நான் பழமையான கிறிஸ்தவ அனுபவத்திற்கு நிகர் ஏதுமில்லை. என்னுடைய அனுபவத்தை நான் எதற்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அது இவ்வுலக ஐசுவரியமாயிருப்பினும், முழு உலகமாய் இருப்பினும், அல்லது கிரக மண்டலமாக (Solar System) இருப்பினும், இயேசு அவரைக் குறித்து எனக்குப் போதித்து இருப்பவைகளை நான் ஒருக்காலும் விட்டுக் கொடுக்கமாட்டேன்.
14. இப்பொழுது நம்முடன் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரைக் காணும் போதெல்லாம் என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகின்றது. அவர் கக்க தண்டத்தின்(Crutches) உதவியால் நடப்பவர். அன்றிரவு அவர் இராப் போஜனத்தில் பங்கு கொள்வதைக் கவனித்தேன். ஐயா, காண்பதற்கு நீங்கள் ஓரல் ராபர்ட்ஸைப் போன்றிருக்கிறீர்கள் என்று யாராகிலும் உம்மிடம் கூறினதுண்டா-? ஒவ்வொரு முறையும் அவரை நான் காணும் போதும்... உங்களில் எத்தனை பேர்... அநேகமாக நீங்கள் எல்லோருமே ஓரல் ராபர்ட்ஸைப் பார்த்திருக்கிறீர்கள். இவர் காண்பதற்கு ஓரல் ராபர்ஸைப் போல் இருக்கிறார் அல்லவா-? நான் திரும்பிப் பார்க்க நேர்ந்தது. இவருடைய தேக அமைப்பு ஓரலின் தேக அமைப்பைக் காட்டிலும் சற்று பெரிதாயுள்ளது. இவர் தலைமயிரை வாரிக் கொண்டிருக்கும் விதமும், இவருடைய நெற்றியும், இவருடைய முகத் தோற்றமும், இவர் கௌரவம் உள்ளவராகத் தோற்றமளிக்கிறார். ஓரலைப் போல் உட்காருகிறார். எனவே . ''அது சகோ.ஓரலாயிருக்குமா-?'' என்று நான் வியந்தது உண்டு. காண்பதற்கு அவரைப் போலவே இருக்கிறார்.
15. சகோ.ஓரல் வேதாகமப்பள்ளி ஒன்றை நிறுவப் போவதாக அன்றொரு நாள் கேள்விப்பட்டேன். என்ன-? பல்கலைக் கழகம். ஆம், சகோ.கார்ல் வில்லியம்ஸ் அதன் முக்கிய நிர்வாகி. அது எந்நிலையில் உள்ளது என்று எனக்குத் தெரியாது.
16. ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தருக்குச் சித்தமானால் ஞாயிறன்று நாம் ஈஸ்டர்... இல்லை. கிறிஸ்துமஸ் செய்தியைக் கேட்கலாம். கூடார விஸ்தரிப்பு பணி தொடங்கப் போவதைக் குறித்து நான் நன்றி உள்ளவனாயிருக்கிறேன். அது கூடாரத்தில் வருபவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவது மாத்திரமாய் இராமல், இங்கு கூடி வரும் சபையோரின் மேல் தேவனுடைய கிருபையும் பெருகும் ஒன்றாக இருக்குமென்று நம்புகிறேன். நாம் அதை விரும்பி நேசிக்கிறோம்.
17, இதைக் கூற விரும்புகிறேன். நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நான் கூறவேண்டிய அநேக காரியங்கள் உண்டு, ஆனால் அவற்றை எல்லாம் நான் கூறப்போவதில்லை. அது அதிக நேரம் பிடிக்கும். ஆனால் ஒன்றை மாத்திரம் அறிவிக்க விரும்புகிறேன். அது என்னால் வெளியே கூறமுடியாத ஒன்றாகும். நான் அறிந்துள்ள காரியங்கள் உண்டு (எல்லோருக்கும் புரிகின்றதா-?) அது கர்த்தரின் நாமத்தின் மேலுள்ளது. ஆயினும் அதை என்னால் வெளியே கூறமுடியாது. அதை நான் எனக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியவனாய் இருக்கிறேன். பாருங்கள்-? ஒரு சம்பவம் சில நாட்களாக முன்னேறிக் கொண்டே சென்று, அது நிகழும் தருவாயில் உள்ளது. பரிசுத்தாவியானவர் ஜனங்களின் மத்தியில் அசைவாடி அந்த இடத்திற்கு வருவதைக் கண்டு நான் பயந்து போனேன். அது என்னவென்று ஜனங்கள் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் பரிசுத்தாவியானவர் அந்த இடத்திற்கு நகர்ந்து விட்டார். என்றாவது சௌகரியமான ஒரு நாளில், கர்த்தக்குச் சித்தமானால், அது என்னவென்பதை நான் வெளிப்படுத்துவேன். கவனியுங்கள், தேவன் அவர்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை அது காண்பிக்கிறது.
18, சகோ.நெவில் சற்று முன்பு கூறிய வண்ணமாக, "அவருடைய பார்வையில் நாம் தவறாக நடந்து கொள்வதை, அல்லது நம் ஒழுங்கின்மையை அவர் நமது கணக்கில் எடுப்பதில்லை.'' இஸ்ரவேலரைக் காணச் சென்ற தீர்க்கதரிசி (பிலேயாம்), அவர்கள் எவ்வளவு ஒழுங்கின்மை உள்ளவர்களாயும் தவறு செய்பவராயும் இருக்கின்றனர் என்று தன் மாமிசக் கண்களினால் கண்டு அவர்களை சபிக்க எண்ணினான், ஆனால் அந்த பேராயரோ அடிக்கப்பட்ட கன்மலையும், அவர்களுக்காக பாவ நிவாரணம் செய்யும் வெண்கல சர்ப்பமும் அவர்கள் மத்தியில் இருப்பதைக் காணத் தவறினான், எனவே, பாருங்கள், பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களைக் கண்டு, அவர்களைச் சபிப்பதற்குக் காரணம் உண்டென்று கருதினான். ஆனால் தேவனோ பாவநிவாரணத்தைக் கண்டார். அவர், "நீங்கள் காண்டாமிருகத்திற்கு ஒத்திருக்கிறீர்கள்'' (எண், 23:22) என்றார். ஆமென், "உங்கள் வழியிலே யார் தடுக்கலைப் போட முடியும்-? உன் கூடாரங்கள் எவ்வளவு நீதியுள்ளதாயுள்ளது-?'' அப்படித் தான் தேவன் அவர்களைப் பார்த்தார். பாருங்கள்-? மனிதன் பார்க்கிற விதமாய் அவர் பார்க்கவில்லை. அவர் தம்முடைய சொந்த விதத்திலே அவர்களைப் பார்த்தார்.
19. ஓ தேவனே, அதுவே என் பங்காயிருக்கட்டும், அதுவே என் பங்காய் இருக்கட்டும். ஏனெனில் நான் உரிமை பாராட்ட என்னில் நல்லது ஓன்றுமில்லை, "என் கைகளில் நான் ஒன்றுமே கொண்டு வரவில்லை. உமது சிலுவையையே நான் கட்டித் தழுவிக் கொண்டிருக்கிறேன்'', பாருங்கள், அது மாத்திரமே நம்மிடமுள்ளது.
20, சரி, இன்றிரவு ஜெபக் கூட்டம் - இது ஜெபக் கூட்ட இரவல்ல. இங்குள்ளது ஒரு வகை சுவிசேஷக்குழு. நாம் தேவனுடைய வார்த்தையை அவர்கள் முன் வைக்க விரும்புகிறோம். இன்றிரவு சில நிமிடங்கள் உங்களிடம் பேச விரும்புகிறேன். வேத பாகத்திற்கு திருப்ப எண்ணம் கொண்டு உள்ள உங்களில் அநேகர்.. இப்பொழுது நடந்த வினோதமான காரியம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா-? நான் வேதாகமத்தைத் திறந்த போது, நான் படிக்க எத்தனித்திருந்த அந்த வேதபாகத்திற்கு அது சரியாய் திறந்தது. ஆம், ஐயா. வினோதம். அது 1-கொரிந்தியர் 11-ம் அதிகாரம். அதைப்பற்றிய சில குறிப்புகளை நான் இங்கு எங்கோ எழுதி வைத்திருந்தேன். அது கிடைத்தால் நலமாய் இருக்குமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இதோ அது இங்குள்ளது. ஆம், ஐயா.
21. நாம் வார்த்தையை அணுகு முன்பு, அதன் ஆக்கியோனை அணுகுவோம். அவர் வார்த்தையாய் இருக்கிறார். வார்த்தையாகிய அவரை நாம் படிக்கும் போது, அவருடைய இரக்கத்தையும் ஆசிர்வாதங்களையும் கோருவோமாக. ஜெபம் செய்வோம்.
22. ஓ, தேவனாகிய கர்த்தாவே, கிருபையும் இரக்கமும் நிறைந்தவரே, மனிதன் பாவம் செய்து உமக்கும் அவனுக்கும் இடையே அந்த பெரிய பிளவை உண்டாக்கி கொண்டு அதை கடக்கக் கூடாதவனாய் இருந்தான். அவன் முற்றிலுமாக இழக்கப்பட்ட நிலையில் இருந்து கொண்டு, வழி எதுவென்பதை அறியாதவனாய் இருந்தான். ஆனால் கிருபை நிறைந்த தேவனாகிய நீர் அவனுக்கு பதிலாக வேறொருவரை நியமித்து, அவனை மீண்டும் அவனுடைய நிலைக்குக் கொண்டு வந்தீர். ஆண்டவரே, இந்த உம்முடைய செயல், உம்மை அறிந்து உள்ள எல்லோரின் இருதயங்களையும் சிலிர்க்கக் செய்து உள்ளது - எப்படி உம்முடைய மகத்தான அன்பின் நிமித்தமாகவும், கிருபையின் நிமித்த மாகவும் ஒரு பதிலியை (Substitute) நீர் ஏற்றுக் கொண்டீர் என்னும் செயல். அதை அறிக்கை இடும் இந்நேரத்தில், ஆண்டவரே, அந்த பதிலியின் பேரிலேயே இன்றிரவு சார்ந்து இருக்கிறோம். அந்த நீதிபரர் எங்கள் அநீதி அனைத்தையும் சுமந்தவராய், பாவிகளாகிய எங்களுக்காக மரித்தார். அவரையே நாங்கள் நம்பி இருக்கிறோம்.
23. இப்பொழுது நாங்கள், எங்கள் இருதயங்களையும் தலைகளையும் வணங்கினவர்களாய், அமரிக்கையோடும் பயபக்தியோடும், அவருடைய வார்த்தையை நன்றி உள்ளவர்களாய் அணுகுகிறோம். இன்றிரவு பரிசுத்த ஆவியின் மூலமாய் உமது கிருபையை அனுப்பி, எங்களை நிலைநாட்டுவதற்கு அவசியமாய் உள்ள ஜீவ அப்பத்தை தந்தருள வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம். எங்களுக்கு என்ன தேவை என்பதை நீர் அறிந்து இருக்கிறீர். நாங்கள் எதைக் கேட்கிறோமோ அதைப் பெற்றுக் கொள்வோம் என்று நீர் வாக்கு அருளியிருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம்.
24. வியாதியஸ்தர், தேவையுள்ளவர் அனைவரையும், ஆண்டவரே, இன்றிரவு நாங்கள் நினைவு கூருகிறோம். அவர்களுக்குத் தேவகிருபையை அபரிமிதமாய் தந்தருளும். பிதாவே, பின் வாங்கிப் போனவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். வரப் போகும் விடுமுறை அவர்களுடைய இருதயங்களில் நினைப்பூட்டுதலைக் கொணர்ந்து, அவர்கள் எந்த நிலையிலிருந்து உமது ஐக்கியத்திலிருந்து விழுந்து போனார்கள் என்பதை உணருவார்களாக. தேவனே, அவர்கள் சபைக்கு மீண்டும் வர வேண்டுமென்றும்; கிருபையும், இரக்கமும், அன்பும், தயவும் கிடைக்கப் பெறும் முதற்பேறானவரின் சங்கத்திற்கு அவர்கள் திரும்ப வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறோம். அதை அருளும், ஆண்டவரே, அங்கு நமது ஆத்துமாவும், சிந்தையும், சரீரமும் சுகத்தைப் பெற்றுக் கொள்ளும். அதை அருளும். ஆண்டவரே, வார்த்தையை இன்றிரவு ஆசிர்வதித்துத் தாரும். எங்கள் அனைவரையும் பெலப்படுத்தி, உமது ஆசிர்வாதங்களை எமக்கருளும், இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம்; ஆமென்.
25, இப்பொழுது சில நிமிடங்கள் 1-கொரிந்தியர் 11-ம் அதிகாரம், 23, 24, 25-ம் வசனங்களுக்கு உங்கள் கவனத்தைக் கொண்டு வர விரும்புகிறேன்.
"நான் உங்களுக்கு ஒப்பு வித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,

ஸ்தோத்திரம் பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாய் இருக்கிறது; என்னை நினைவு கூரும்படி இதை செய்யுங்கள் என்றார்.

போஜனம் பண்ணின பின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன் படிக்கையாய் இருக்கிறது; நீங்கள் இதைப் பானம் பண்ணும் போதெல்லாம் என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.''
26. நான் பேசுவதற்காக இதனின்று "ஆண்டவரை நினைவு கூருதல்," என்னும் பொருளைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். இது சென்ற ஞாயிறன்று இராப் போஜன ஆராதனையின் போது பேசப்பட வேண்டிய பொருளாகத் தென்படுகிறது. ஆனால் நமது சிந்தனைகளை ஒன்றுபடுத்தி தேவனை வழிபடும் இந்நேரத்தில், ஒரு வித்தியாசமான கோணத்தில் இதை சில நிமிடங்கள் அணுக நான் விரும்புகிறேன்.
27. நாம் தேவனுடைய மேசையிலிருந்து தொடங்கலாம். ஏனெனில் நாம் தேவனை நினைவு கூர அது ஒரு நல்ல இடமாகும். தேவனை அவருடைய மேசையின் அருகில் நினைவு கூருவது -- நாம் தெரிந்து கொண்ட பொருளும் அதைத் தான் குறிப்பிடுகின்றது. நாம் பாத்திரத்தை எடுத்து இரத்தத்தைப் பானம் பண்ண வேண்டுமென்றும், நாம் அப்பத்தைப் புசிக்க வேண்டுமென்றும், அவர் நமக்காகச் செய்ததை, இந்த விதமாக நினைவுகூர வேண்டுமென்றும் பவுல் கூறியுள்ளான். அதை நாம் அன்றாடகச் செயலாக சாதாரணமான ஒன்றாக ஆக்கிக் கொள்ள விரும்புவதில்லை, நாம் உண்மையாக ஆண்டவரை நினைவு கூர்ந்து அங்கு வரவே விரும்புகின்றோம். பாருங்கள்-? அது அவருடைய கிருபையும் இரக்கமும் என்று நினைவு கூர்ந்து, அது மாத்திரமே நம்மிடமுள்ள ஒரே நம்பிக்கை என்பதை உண ரவேண்டும். நாம் என்ன செய்த போதிலும், கிறிஸ்து நமக்காகச் செய்துள்ள அந்த செயலுக்கு அது எவ்விதத்திலும் ஈடாக முடியாது.
28. இந்த வாரம் வருத்தமான ஒரு அனுபவம் எனக்கு உண்டாயிருந்தது. ஆயினும் அது மகத்தானது என்று என்னால் கூறமுடியும். நம்மிடையே ஒரு சமயம் அமர்ந்திருந்த ஒரு சகோதரனை நான் அடக்கம் செய்ய நேர்ந்தது. அந்த சம்பவம், உங்களில் அநேகருக்குத் தெரியும். அது நமது அருமை சகோதரன் ராஜர்ஸ். பஸ்டி ராஜர்ஸ் என்று நாம் அவரை அழைப்பது வழக்கம். எவரட் ராஜர்ஸ். நானும் சகோ.பாங்க்ஸ்-உட்டும், சகோ.சாத்மனும் அடக்க ஆராதனை-க்குச் சென்றிருந்தோம்.
29. நான் முதன் முதலாக அவரை (ஞானஸ்நானத்தில்) அடக்கம் செய்த போது, பனிக்கட்டியின் வழியாக பிரயாணம் செய்து அவருடைய இடத்தை அடைந்தேன். அது 25-ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்தது. அங்கிருந்த சேற்று நீரில் நான் அவருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து அடக்கம் செய்தேன். நாங்கள் டாட்டன் ஃபோர்ட் என்னும் இடத்தில் உள்ள அந்த பாலத்தை, அவருடைய சவ அடக்கத்திற்காக சென்ற போது, கடக்க நேர்ந்தது. அப்பொழுது என்னுடன் வந்திருந்த அந்த சகோதரர்கள் இடம் என்னுடைய அனுபவத்தைச் சொல்லிக்கொண்டே சென்றேன். ஒரு நாள் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்த போதகர் ஒருவர் அங்கு ஒரு பெரிய கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் கூட்டத்திற்கு வந்தவர்களிடம், "பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த அந்த தீவிரவாதி இயேசுகி றிஸ்துவின் நாமத்தில் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து வருகிறார். அம்முறையில் ஞானஸ்நானம் பெற்றுள்ள எவரும் என் கூடாரத்திற்கு வரவேற்கப்படமாட்டார்கள்,'' என்றார்.
30. அவ்வமயம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று இருந்த ஒருவர் அந்த கூடாரத்தில் அமர்ந்து இருந்தார். அவர் தான் சகோ.ஜார்ஜ் ரைட்டும் அவருடைய குடும்பத்தினரும். இதைக் கேட்ட பின்பு அவர்கள் செய்யக் கூடிய ஒன்றே ஒன்று. அவர்கள் மறுபடியும் அந்தக் கூடாரத்திற்குச் செல்லவில்லை.
31. அன்று அந்த விரிகுடாவில், அந்த போதகர் கூட்டத்தை முடித்து விட்டு என்ன நேரிடுகிறது என்று கவனிக்க வந்தார். அவருடன் அவருடைய சபையோரும் நின்று கொண்டு இருந்தனர். நான் ஞானஸ்நானம் கொடுக்க அங்கு சென்றிருந்தேன். மலைகளில் மழை பெய்த காரணத்தால், அது வயலில் இருந்த சேற்றை எல்லாம் அடித்துக் கொண்டு வந்தது. அந்த உபநதிகள் சேற்றை சுமத்து வந்து, நீல நிறமான அந்த நதியை சேறுமயமாக ஆக்கி விட்டன. நான் தண்ணீருக்குள் நடந்து சென்றேன். அது இடுப்பளவு இருந்தது. மூப்பர்களில் ஒருவர் வேதாகமத்தை என் கையில் கொடுத்தார். நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்தாவியின் வரத்தைப் பெறுவீர்கள்,'' (அப். 2: 38) என்று பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு கூறினதை நான் வேதாகமத்திலிருந்து படித்தேன்.
32. அந்த நாளில் தான் ஜார்ஜி கார்டர் என்பவள் அங்கு படுத்துக் கொண்டிருந்து, தன் கையையுயர்த்த முயன்றாள். அவள் அசையாமல் ஒன்பது வருடம் எட்டு மாதங்களாக படுக்கையில் படுத்த வண்ணம் இருந்தாள். அவளுடைய எடை ஏறக்குறைய அறுபது பவுண்டுகள் மாத்திரமே. அவள் அங்கத்தினளாயிருந்த சபையின் முக்கிய அதிகாரிகள், அவர்கள் சபையைச் சேர்ந்த யாராகிலும் என் கூட்டத்திற்கு சென்றால் அவர்கள் சபையிலிருந்து பிரஷ்டம் செய்யப்படுவார்கள் என்று அறிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் அன்று மாலையிலேயே ஜார்ஜி கார்டர் உடனடியாக சுகம் பெற்றாள். அதன் பின்பு அவள் ஞானஸ்நானம் பெற விரும்பினாள். அவளைக் குறித்து நான் தரிசனம் கண்டதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அவளுடைய கைகளும் கால்களும் ஒன்று சேர்ந்திருந்தன. அவளைக் குறித்து நான் தரிசனம் கண்டேன். நான் அவள் மீது கையை வைத்த மாத்திரத் தில், அவள் பரிசுத்தாவியின் வல்லமையால் சுகமடைந்து படுக்கையை விட்டு எழுந்தாள். அவள் அந்த மெதோடிஸ்டு சபையில் அங்கத்தினளாக இருந்தாள். அந்த மெதோடிஸ்டு சபையின் போதகரான சகோ.ஸ்மித் என்பவர் தான் அந்த கரையில் அவளுடைய சபையோருடன் நின்று கொண்டிருந்தார்.
33. நான் வேதப் பிரகாரமான கிறிஸ்தவ முறைமையின்படி ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கினேன். நான் 5 அல்லது 6 பேர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து முடித்த பின்பு, அங்கு ஞானஸ்நானத்திற்காக நின்றிருந்தவர்களின் வரிசை கலைய ஆரம்பித்தது. அதோ அந்த மெதோடிஸ்டு சபையோர் தாங்கள் உடுத்தியிருந்த நல்ல உடைகளுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதற்காக அங்கு வந்து சேர்ந்தனர். அழகான பட்டு துணிகளை உடுத்தியிருந்த அந்த மாதுகள், ஒருவர் பின் ஒருவராக, அந்த சேற்று நீருக்குள் நடந்து வந்து, கண்ணீர் மல்க, தங்கள் உதடு சாயம் (Lipstick) தண்ணீரில் கரைந்து போன நிலையில், பாவ அறிக்கை செய்து ஞானஸ்நானம் பெற்றனர்.
34. அந்த கூட்டத்தில் ஒருவர் பரந்த தோள்களையுடையவராய், திடகாத்திரம் உள்ளவராய், தன் விலையுயர்ந்த 'செர்ஜ் சூட்' (Serge suit)டுடன் என்னை அணுகி, "நானும் தீர்மானம் செய்து விட்டேன்,'' என்றார். அவர் தான் பஸ்டி ராஜர்ஸ். யாரும் அவருடன் ஒன்றும் கூறாமலேயே அவர் தீர்மானம் செய்தார். அவருடைய அறிக்கையின் பேரில், அவரை நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீரில் அடக்கம் செய்தேன்.
35. சென்ற வாரம் மில் டவுன் என்னுமிடத்தில் அவரை மண்ணின் கீழ் அடக்கம் செய்தேன். அப்பொழுது நான் "உயிர்த்தெழுதலின் பரிபூரணம்,'' என்பதைக் குறித்து பிரசங்கம் செய்தேன். நான் ஒரு மிஷனரியாக இருந்த காரணத்தால், வெவ்வேறு தெய்வங்களையும் தத்துவ ஞானிகளையும் என் வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். கிறிஸ்தவ மார்க்கத்துக்குப் புறம்பாயுள்ள எதுவும் வெறும் தத்துவமே, அவர்கள் இதை, அதை, மற்றதை விசுவாசிக்கின்றனர். ஆனால் அந்த மகத்தான சிருஷ்டி கர்த்தரே சர்வசிருஷ்டியையும் படைத்தார். சிருஷ்டி என்று ஒன்று இருந்தால், சிருஷ்டி-கர்த்தர் ஒருவர் இருக்க வேண்டியது அவசியம். சிருஷ்டி என்ற, ஒன்று இருக்குமானால், சிருஷ்டி கர்த்தர் தான் அதை சிருஷ்டித்திருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனின் வேலைப்பாடும் அந்த மனிதனையே பிரதிபலிக்கின்றது. ஒருவன் நல்ல தச்சனாக இருந்தால், அவன் சிறந்த பணிபுரிகிறான். ஒருவன் நல்ல மெக்கானிக்காக இருந்தால், அவன் சிறப்பாகத் தன் தொழிலைச் செய்கிறான். நீங்கள் செய்யும் தொழில் உங்களையே பிரதிபலித்துக் காண்பிக்கிறது. அவ்வாறே தேவனுடைய படைப்பும் தேவனையே பிரதிபலிக்கின்றதாய் உள்ளது. தேவன் எல்லாவற்றையுமே ஒரு நோக்கத்திற்கென படைத்து உள்ளார். தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும் எதுவும் செத்துப் போனால், அது மீண்டும் உயிரேடெழுகின்றது. அவ்விதம் நிகழாத ஒன்றை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். நான் பூக்களைக் குறித்தும் மரங்களைக் குறித்தும் அடிக்கடி கூறியிருக்கிறேன்.
36. சூரியன் காலையில் ஒரு சிறு குழந்தையைப் போல் உதிக்கின்றது. அதன் கிரணங்கள் அப்பொழுது பலவீனமாய் உள்ளன. 10 மணியளவில் அது வாலிபனாகின்றது. 12 மணிக்கு அது முழு பெலன் கொண்டு பிரகாசிக்கின்றது. 2 மணியளவில் அது என்னைப் போல் ஆகின்றது. மாலை 5 மணிக்கு அது பாட்டனைப் போலாகி படுத்துக் கொள்கிறது. முடிவில் அதன் கிரணங்கள் குளிர்ச்சி அடைந்து அது சாகின்றது. அது தான் அதன் முடிவா-? அது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினது. அது பூமியின் மேல் பிரகாசித்த போது, தாவரவர்க்கங்களை உயிர் பெறச்செய்தது. சென்ற ஆண்டு செத்துப் போன செடிகள் அனைத்தையும் அது உயிரோடெழுப்பினது. தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றின அதன் முடிவு அது தானா-? இல்லை, அடுத்த நாள் காலையில் அது புது ஜீவனுடன் உதயமாகின்றது. ஒவ்வொரு மரமும், எல்லாமே சந்திரன், நட்சத்திரங்கள், கிரக மண்டலம் எல்லாமே அவ்வாறே உள்ளன.
37. தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமாக உயிர்த்தெழுதல் உண்டு, நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று அவருடைய நேரத்திற்காக காத்து இருத்தலேயாம் தேவன் தம்முடைய நேரம் வரும் வரை காத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது அவர் செய்து கொண்டு இருப்பது போன்று.
38. அந்த மரத்திலிருந்து உதிர்ந்து போன அந்த மகத்தான இலைகள் பூமியின் எல்லா பாகங்களில் இருந்தும் விழுந்து போன வெவ்வேறு நிறப்பூக்களான சிகப்பு, பச்சை, நீலம், பழுப்பு போன்றவை. தேவனுடைய இயற்கை அவைகளை பூமியின் கீழ் செத்த நிலையில் புதையச் செய்து உள்ளது. தேவன் தமது பூச்செண்டை நட்டு விட்டார், அவர் பூச்செண்டை நடும் பொழுதே, வசந்த காலத்தில் அது உயிர்த்தெழுமென்று அவருக்குத் தெரியும். பூமி தனது வடிவப் பாதையில் (Orbit) சுற்றி, மறுபடியும் சூரியனருகே வரவேண்டும். அப்பொழுது செத்து அடக்கம் பண்ணப்பட்ட அந்த பூக்கள் மீண்டும் உயிரோடெழும்.
39. "இது தான் முடிவு," என்று கூறவேண்டாம். மரத்திலேயே பழுப்பு நிறம் அடையும் இலைகள் கூட அது தான் முடிவு என்று சொல்வதில்லை. அது செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று தேவனுடைய காலச் சக்கரம் சுழன்று, தேவ குமாரனுடைய வருகையின் நேரம் வரைக்கும் காத்திருத்தலாகும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்த ஒவ்வொரு சிருஷ்டியும் உயிரடைந்து. வெளிவரும், அவருடைய சமுகத்தில் அவரை நினைவு கூருதல். ஓ, என்னுடைய வாழ்க்கைப் பாதை முடிவுக்கு நான் வரும் போது, அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறார் என்பதை மனதில் கொண்டவனாய் அவரை நினைவு கூர்ந்து, அவருடைய சமுகத்தில் மரிக்க விரும்புகிறேன். அவர் தான் அந்த ஒருவர். 
40. நாம் தேவனுடைய மேசைக்கு வரும் போது... 'நான் முன்பு விவரித்த விதமாக, தேவனுடைய மேசை என்பது... நாம் 'ஐக்கியம்' (Communion) என்று அழைப்பது (இராப்போஜனம் என்பது ஆங்கிலத்தில், 'Communion' அதாவது 'ஒற்றுமை,' அல்லது 'ஐக்கியம்,' என்னும் அர்த்தங்கொண்டதாய் அழைக்கப் படுகிறது-தமிழாக்கியோன்) அப்பம் புசித்தலைக் குறிப்பிடுவதாக நாம் எண்ணுகிறோம். நாம் சரியானவைகளைத் தவறான இடங்களில் பொருத்துகிற வர்களாய் இருக்கிறோம். நாம் புசிக்கும் அப்பமும், நாம் பானம் பண்ணும் திராட்சரசமும் அவ்வளவு முக்கியம் வாய்ந்ததல்ல. ஆனால் முக்கியமானது என்னவெனில், அவருடன் உறவாடுதலே, ஆங்கிலத்தில் 'கம்யூனியன்' என்னும் பதம் 'ஒருவருடன் பேசுதல்' என்று அர்த்தங் கொள்ளும். அவருடன் நாம் உறவாடி அவரை நினைவு கூருவோமானால், அதுவே ஆராதனையில் மிகவும் ஆசிர்வாதமான நேரமாயிருக்கும். பாருங்கள்-? நமது வாழ்க்கையின் ஒவ்வொரு மணி நேரமும் அவருடன் உறவாடும் நேரமாக இருத்தல் அவசியம்.
41. தேவனுடன் உறவாடி ஐக்கியங்கொள்ளுதல் என்பது பாலைவனத்திலுள்ள பாலைவனச் சோலையை (Oasis) போன்றதாகும். அது குளத்தின் அடியிலுள்ள நீரூற்றைப் போன்றது. அவ்வழியாக வரும் பயணி அங்கு நின்று, நீரூற்றின் தண்ணீரைக் குடித்து தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறான். அது தான் ஆண்டவரை நினைவு கூருதலாகும். இத்தேசத்தில் சஞ்சாரிகளாகத் திரிந்து கொண்டு இருக்கும் பயணிகளாகிய நாம் அனைவரும் ஒன்றுகூடி அவருடைய மேசையினண்டை வந்து, அங்கு தேவனுடைய வார்த்தையின் பேரில் ஐக்கியங் கொண்டவர்களாய், தாகமாயுள்ள நமது ஆத்துமாக்கள் திருப்தியடையும் வரைக்கும், அவருடைய ஆசிர்வாதங்களையும் கிருபையையும் பானம் பண்ணுகிறோம். அதன் பின்பு நாம் களைப்பு நீங்கியவர்களாய் புத்துணர்வு பெற்று திருப்தி அடைந்து, ஆராதனை ஸ்தலத்தை விட்டுச் சென்று, வாழ்க்கையாகிய பாலைவனத்தில் எழக்கூடிய பிரச்சினைகளைச் சந்திக்கச் செல்கிறோம். ஆம், அது பாலைவனத்தில் பாலைவனச் சோலையாய் அமைந்து இருந்து, நமது தாகத்தைத் தீர்த்து, நாம் புத்துணர்வு பெறச் செய்கிறது.
42. தேவனை ஆராதிக்கும் ஒவ்வொருவருக்கும் அது அவ்வாறே இருக்க வேண்டும். தேவனை உண்மையாக ஆராதிக்கும் ஒவ்வொருவரும் ஒன்று கூடி ஐக்கியங் கொள்ள விரும்புகின்றனர். அந்த ஐக்கியத்தில் தெய்வீகமான ஏதோ ஒன்று உள்ளது. அது தேவனால் கட்டளையிடப்பட்டு, பரிசுத்தமானதாயுள்ளது. நீதிமான்கள் அகற்காக தாகம் உடையவர்களாய் இருக்கின்றனர்.
43. "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, என் ஆத்துமா தேவன் மேல் தாகமாய் இருக்கிறது'' என்று தாவீது கூறினான் (சங். 42:1, 2). வேட்டை நாய்கள் மானைத் தாக்கி அதன் பக்கங்களில் பிளவுகளை உண்டாக்கும் போது, காயப்பட்ட அந்த மான் பெருமூச்சு வாங்கிக் கொண்டு, அங்கு நின்று கவனித்துக் கொண்டே இருக்கிறது. தேவன் அதற்களித்து உள்ள புலனைக் கொண்டு அநேக மைல்கள் அப்பாலுள்ள தண்ணீரை அது முகர்ந்து அறிந்து கொள்ள முடியும். இரத்தம் அதனின்று பீறிட்டு வெளி வந்து, அது சாகும் தருவாயில் இருக்கும் போது, அது தலையை மேலே தூக்கி முகர்கிறது. அது மாத்திரம் நீரூற்றை அடையுமானால், அது உயிர் பிழைக்குமென்று அதற்குத் தெரியும். அப்பொழுது யாருமே அதை ஒன்றும் செய்ய முடியாது. அது மாத்திரம் தண்ணீரை யடைந்தால், அதைப் பின்தொடரும் நாய்கள் அனைத்தையும் அது ஏமாற்றி விடும். ஏனெனில் அதற்கு ஜீவனைத் தரக்கூடிய ஒன்றை அது கண்டு பிடித்து விட்டது என்று அதற்குத் தெரியும்.
44. அவ்வாறே சபையும், கிறிஸ்து முக்கியம் வாய்ந்தவராக கருதப்படும் அந்த ஸ்தலத்தை அடையும் போது, நாம் அவருடைய சமுகத்தை அடைய வேண்டும் என்றும், ஒருவரோடொருவர் நாம் ஐக்கியங் கொள்ள வேண்டுமென்றும் நாம் தாகம் கொள்கிறோம். அதுவே ஜீவனை அளிக்கக்கூடிய ஒரு மூலஸ்தானமாய் உள்ளது. அங்கு எந்த பிசாசும் உங்களை மேற்கொள்ள முடியாது. மரணமும் கூட அங்கு தோல்வியடைகிறது. ஓ, என்னே ஒரு நம்பிக்கை-! என்னே ஒரு ஸ்தலம்-! அங்கு நாம் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். அவ்விதம் செய்யும் போது, இயேசுவே அதை சாத்தியமாக்குகிறார் என்று நாம் நினைவு கூர வேண்டும். அவர், தாம் நமக்காக இவைகளனைத்தையும் செய்தார். எனவே நாம் அவரை நினைவு கூரவேண்டும். புறஜாதிகளாகிய நாம் தேவன் அற்றவர்களாக, அவருக்கு அந்நியராய் இருந்து, ஊமையான விக்கிரகங்களின் பின்னால் சென்று இருந்தோம் என்பதை நினைவு கூருங்கள். கிறிஸ்து யூதருக்காக அல்ல, விழுந்து போன ஆதாமின் சந்ததியிலுள்ள ஒவ்வொரு நபருக்காகவும் மரித்தார் என்பதை நினைவு கூருங்கள்.
45 நாம் அவருடைய நீரூற்றாகிய இராப்போஜன மேசையினருகில் வந்து அவரை நினைவு கூரும் போது, இஸ்ரவேல் ஜனங்களின் பிரயாணம் நமது ஞாபகத்திற்கு வரவேண்டும். அவர்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டு, வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரிக்க பிரயாணப்பட்டு சென்று கொண்டு இருந்த போது, அவர்களுக்கு தண்ணீரில்லாமல் போனது. எல்லாவிடங்களும் உலர்ந்து கிடந்தன. ஒவ்வொரு மலையின் அடிபாகத்திலும் நிரூற்றுக்கள் இருந்து இருக்க வேண்டும். ஆனால் அங்கு ஒன்றுமே இல்லை. அவர்கள் வனாந்தரத்தில் மடிந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது ஒரு கன்மலை அங்கு தோன்றினது. மோசே அந்த கன்மலையை அடித்த போது, திரளான தண்ணீர் அதனின்று புறப்பட்டு வந்தது. தாகமாயிருந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும், பிள்ளையும், தாகமாயிருந்த மிருகமும் கூட அந்த திரளான தண்ணீரைக் குடிக்க முடிந்தது.
46. அந்த தங்க வேத வாக்கியமாகிய யோவான் 3:16 இவ்விதம் கூறுகின்றது: “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் (அவரை விசுவாசிக்கிறவன், அவருடன் உறவாடி ஐக்கியங்கொண்டு அவரை நினைவு கூருகிறவன்) எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் அன்பு கூர்ந்தார். "நமக்காக அடிக்கப்பட்ட கன்மலை கிறிஸ்து, என்றும் அழிந்து கொண்டு இருக்கும் உலகத்தை, அழிந்து கொண்டிருக்கும் புறஜாதியை, அழிந்து கொண்டு இருக்கும் யூதனை இரட்சிக்கவே அவர் அடிக்கப்பட்டார் என்பதையும் நாம் நினைவு கூரவேண்டியவர்களாய் இருக்கிறோம். கிறிஸ்து தமது ஜீவனை அபரிமிதமாகக் கொடுத்து, பசியாயிருப்பவர்களும், தாகமாய் இருப்பவர்களும் அதைப் பெற்றுக் கொள்ளும்படி செய்தார். ஏசாயா தீர்க்கதரிசி, ''ஓ. தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள். நீங்கள் வந்து பணமுமின்றி விலையுமின்றி திராட்சைரசமும் பாலும்கொள்ளுங்கள்'' என்றான் (ஏசா.55:1). வாருங்கள், ஏனெனில் இது இராப் போஜனம், ஆண்டவரை நினைவு கூர்ந்து வாருங்கள்.
47. தாகத்தைத் தீர்த்துக் கொண்ட பீர்-லகாய்-ரோயீ என்னும் கிணற்றண்டையில் ஆண்டவரை நினைவு கூர்ந்தது என் ஞாபகத்துக்கு வருகிறது. (ஆங்கில வேதாகமத்தில் Bterlahoi-ra) என்றும், தமிழில் லகாய்-ரோயீ என்றும் எழுதப்பட்டு உள்ளது - தமிழாக்கியோன்) அதற்கு எபிரேய மொழியில் "உயிரோடிருந்து என்னைக் காண்கிற தேவன்" என்று அர்த்தம். ஆகார் தன் பணியில் ஈடுபட்டிருந்த போது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தவறாக நியரயந் தீர்க்கப் பட்டு புறம்பாக்கப்பட்டாள். அவளுக்குப் போக இடம் ஏதுமில்லை, குழந்தை சாகும் தருவாயில் இருந்தது. துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்து விட்டது, தண்ணீருக்காக அழும் அழுகை என்னவென்று ஒரு தாயின் உள்ளம் மாத்திரமே அறியும். அந்தக் குழந்தையின் நாவு வீங்கிப் போய், அவன் ஒவ்வொரு நிமிடமும் பலவீனமடைந்து கொண்டே வந்தான். அவள் தன் கடமையைச் செய்து கொண்டிருந்த போது புறம்பாக்கப்பட்டாள். அவளுக்குப் போக இடம் ஏதும் இல்லை. அவள் தண்ணீர் குடிக்காமல், உலர்ந்து போயிருந்த குழந்தை யின் உதடுகளின் மேல் கடைசி சொட்டு தண்ணீரையும் ஊற்றி தந்தாள். பின்பு துருத்தியும் உலர்ந்து விட்டது. அவள் பிள்ளையை ஓரிடத்தில் படுக்க வைத்து விட்டுப் புறப்பட்டாள். அந்த சிறுவன் தண்ணீருக்காகக் கதறினான். அவன் பலவீனமடைந்து கொண்டே வந்தான். அது அவளுடைய ஒரே குழந்தை (ஆதி. 21:14-20).
48. அவளுடைய குற்றமற்ற இருதயம், ''ஓ. தேவனே, நான் என்ன செய்தேன்-? நான் என்ன செய்தேன்-?'' என்று கதறி இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவளுடைய பிள்ளை அவளுடைய கரங்களில் சாவதைக் காண அவளால் பொறுக்க முடியவில்லை. எனவே அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழ் விட்டு விட்டு, அம்பு பாயும் தூரத்தில் போனாள். ஒருக்கால் அது நூறு கெஜம் தூரம் அல்லது சற்று அதிகமாக இருந்திருக்கக் கூடும். 'அங்கு அவள் ஒரு செடியைக் கண்டு, அவ்விடத்தில் முழங்காற்படியிட்டு சத்தமிட்டு அழுதாள். அவள், “ஏன் இது சம்பவித்தது-?'' என்று வியந்திருக்கக் கூடும். அவள் சரியானதையே செய்து கொண்டு வந்திருக்கும் போது, இப்படிப்பட்ட காரியம் அவள் மேல் ஏன் சுமத்தப்படவேண்டும்-? அநேக முறை நாமும் கூட, நமது வியாதியும் துன்பங்களும் ஏன் நமக்கு வரவேண்டுமென்று நினைப்பதுண்டு. ஒருக்கால் நமக்கு கிருபையும் இரக்கமும் காண்பிக்கவே அவை யாவும் நேரிட்டு இருக்கும். அவள் இவ்விதம் யோசித்துக் கொண்டிருந்த போது, குழந்தையின் பலவீனமான அழுகையின் சத்தம் அவள் காதுகளில் விழுந்து கொண்டு இருந்தது. பின்பு அது மறைந்து விட்டது.
49. அப்பொழுது அவளிடம். "நீ ஏன் அழுகிறாய்-?" என்று கூறும் ஒரு சத்தத்தை அவள் கேட்டாள். ,
50. அவள் திரும்பிப் பார்த்தாள். அப்பொழுது துரவில் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வருவதை அவள் கண்டாள். களைப்பைப் போக்கிக்கொள்ள என்னே ஒரு நீரூற்று-! பீர்-லகாய்-ரோயீ. அதற்கு "உயிரோடிருந்து என்னைக் காண்கிற தேவன்'' என்று அர்த்தம். "அவர் மரிக்க முடியாது-! மெல்கிசேதேக்கு, 'எல் ஷடாய்,'' (El-Sha.dai), உயிரோடிருந்து என்னைக் காண்கிற தேவன், என் தேவைகளை அறிபவர். அவர் என்னை நினைவு கூர்ந்தார். நான் அவரை நினைவு கூர்ந்த நேரத்தில் அவர் என்னை நினைவு கூர்ந்தார். அவர் ஜீவிக்கிறார் என்று எனக்குத் தெரியும். அவர் வனாந்தரத்தில் இந்நீரூற்றை எழுப்பினார்.''
51. ஓ. இதை நாம் இந்நேரத்தின் செய்தியுடன் பொருத்துவோம். ஸ்தாபனங்கள் என்னும் வனாந்தரத்தில் சமூக சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு, உலக நாகரீகம் உள்ளே நுழைந்து, சத்தியமானது உடைபட்டிருக்கும் இந்நேரத்தில்,'' --
52. ''உயிரோடிருந்து என்னைக் காண்கிற தேவன்" அந்த துரவண்டையில் இன்றிரவு மறுபடியும் நின்று கொண்டிருக்கிறார் என்பதை நினைவுகூரும்போது-! தேவனை ஆராதிக்கும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவை நினைவு கூருதல் என்பது முக்கியம் வாய்ந்ததாய் உள்ளது. ஆம். ஒ, அவள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு புறம்பாக்கப்பட்டாள். இல்வுலகில் இயேசு வாழ்ந்த போது அவர், "நானே ஜீவத்தண்ணீர், ஜீவனையளிக்கும் தண்ணீர் நானே," என்றார்.
53. என் மனதில் எழும் வேறொரு கருத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். இயேசு நியாய ஸ்தலத்திற்குக் கொண்டு வரப்பட்ட போது வேறெதற்குமல்ல, பரிகாசம் செய்யப்படுவதற்காக... அவர் பிலாத்து இடமிருந்து ஏரோதினிடம் அனுப்பப்பட்டார். பிலாத்து அதனுடன் சம்பந்தம் கொள்ள விரும்பாமல், தன் கைகளைக் கழுவினானென்று உங்களுக்குத் தெரியும். உங்கள் பொறுப்புக்கு அது வரும் போது, ஒரு தீர்மானத்தை நீங்கள் எடுக்க வேண்டும். அதை வேறு யார் பேரிலாவது தள்ளிவிடக் கூடாது. அது உங்கள் பொறுப்பு தனிப்பட்ட நபர் என்னும் நிலையில், ஆனால் இயேசுவோ பரிகாசம் செய்யப்படுவதற்காக ஏரோதினிடம் அனுப்பப்பட்டார். ஏனெனில் அற்புதங்களைச் செய்பவர் என்னும் பெயர் அவருக்கு இருந்தது. அவர் சபையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டவர். அவரை ஏரோதினிடம் அனுப்பினால் அவர்களிடையே இருந்த பகைமை தீர்ந்து விடுமென்று பிலாத்து எண்ணினான்.
51. எனவே இயேசு, வீதிகளின் வழியாக நடத்தி செல்லப்பட்டு உயர் நீதி மன்றத்துக்கு - ஏரோதினிடம் கொண்டு வரப்பட்டார். அவரைச் சந்திக்கும் தருணம் ஏரோதுக்கு ஒரே முறை கிடைத்தது. ஒரு மனிதன் எவ்வளவு மூடனாக இருக்க முடியும் பார்த்தீர்களா-? அவனுக்கு முன்னால் நின்று கொண்டு இருந்தவர், எபிரேய தீர்க்கதரிசிகள் உரைத்த தீர்க்கதரிசனங்கள் எல்லாவற்றின் நிறைவேறுதல் என்று மாத்திரம் அவன் அறிந்திருந்தால்-! பாவம் நிறைந்த அவனுடைய இருதயத்தைக் கிருபையினாலும் இரக்கத்தினாலும் திருப்திபடுத்திக் கொள்ள அவனுக்கு ஒரு தருணம் கிடைத்தது. என்னே ஒரு மூடன் அவன்-!
55. ஆயினும் இத்தகைய தருணம் கிடைத்து, அதை உதறித் தள்ளிவிடும் இன்றைய மனிதனைக் காட்டிலும் அவன் அதிக மூடன் அல்ல, ஏனெனில் நமக்கு 2000 ஆண்டு காலமாக அவனைக்காட்டிலும் அதிகமான போதனைகளும், அவருடைய இரக்கமும் இருந்து வந்து உள்ளது. ஏரோது எத்தகைய மூடனாய் இருந்திருக்க வேண்டும்-! அவன் அவருக்கு முன்பாக இருந்த போதிலும், அவருடைய கிருபைக்காகவும், இரக்கத்திற்காகவும் அவன் மன்றாடவில்லை. அவனுடைய பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்று அவன் கேட்கவேயில்லை. அவனுக்கு முன்பாக நிற்பவர் யாரென்பதை அவன் உணரவில்லை என்று நான் எண்ணுகிறேன். அது நமக்குள்ளே சற்று ஊறட்டும். ஏனெனில் அந்த மனிதனுக்கு சமுதாயத்திலோ அல்லது வெவ்வேறு ஸ்தாபனங்களிலோ அல்லது கல்விக் கூடங்களிலோ பிரபல பெயர் இருக்கவில்லை.
56. ஆனால் வேதத்தையும் அதில் அடங்கியுள்ள வாக்குத்தத்தங்களையும் நன்கு அறிந்திருந்த மக்களிடையே அவருக்கு நல்ல பெயர் இருந்தது. இன்னும் சற்று ஆணித்தரமாகக் கூறுவோமானால், - நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள், அவர் அங்கு நின்ற நொடிப்பொழுதிலேயே அவர் யாரென்று கண்டுகொண்டனர்.
57. ஆனால் ஏரோதுவோ அதை அறிந்துகொள்ளவில்லை. அவர் யாரென்று அவனுக்குத் தெரியவில்லை. என்ன ஒரு பரிதாபம்-! 4000 ஆண்டுகளாகத் தீர்க்க தரிசிகளால் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டவர்; உலகமே புலம்பி எதிர்பார்த்துக் கொண்டு இருந்த அவர்; தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக அவன் முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். இதை நான் மறுபடியும் கூற விரும்புகிறேன். அவன் மூடத்தனமான தீர்மானம் ஒன்றைச் செய்ததால், அவனை மூடனென்று நாம் கருதுகிறோம். அவருடைய இரக்கத்திற்காக அவன் மன்றாடவில்லையென்பதைக் கவனிக்கவும், அவரை வேடிக்கை காட்டும்படி அவன் கூறினான் : "ஓ, நீ அற்புதங்களைச் செய்கிறவன் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்,'' என்றான் அவன். அவன் இரக்கத்தைக் கேட்பதற்குப் பதிலாக, வேடிக்கை காட்டும்படி கேட்டான்.
58. இன்றைக்கும் உலகம் ஏரோதின் தீர்மானத்தையே மறுபடியும் செய்கிறது. அற்புதங்களைச் செய்யும் கிறிஸ்து அன்று செய்தவைகளையே இன்றும் செய்வதை அவர்கள் காணும் போது, அவர்களுக்குத் தேவையானது ஒன்றே. அவர்கள், இன்னின்னவைகளைச் செய்யுங்கள் பார்க்கலாம்,'' என்கின்றனர், நியாயத் தீர்ப்பின் போது ஏரோது, பயங்கரமான ஓரிடத்தில் நிற்பான் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் இன்றைய மனிதரோ அதைக் காட்டிலும் பயங்கரமான இடத்தில் நிற்பார்கள். எரோதுக்கு தீர்க்கதரிசிகளைக் குறித்த அனுபவம் 4000 ஆண்டுகள் மாத்திரமே இருந்தன. ஆனால் நமக்கோ அத்தகைய அனுபவம் 6000 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. அவர்களுக்கு அப்பொழுது இருந்ததைக் காட்டிலும் சிறந்த போதகங்கள் இப்பொழுது உள்ளன. நிச்சயமாக. ஏரோது என்ன காரியத்தைச் செய்தான்-! இன்றும் அது போன்றே உள்ளது.
59. அதன் காரணம் என்ன-? ஏரோது அதைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கவில்லை. அதைப் பற்றி யோசித்து பார்ப்பதற்கு அவன் சிறிது நேரம் கூட செலவழிக்க வில்லை.
60. இன்றைக்கும் ஜனங்கள் அதே விதமாக இருக்கின்றனர் மகத்தான ஒன்றை அவர்கள் காண்கின்றனர். அது அவர்களைத் திடுக்கிடச் செய்கிறது. ஆனால் அதில் அவர்கள் அதிக காலம் நிலைத்திருப்பது இல்லை. ஏதாவது ஒரு ரபீ அல்லது வேத பண்டிதன் அது ஒன்றுமில்லை என்று கூறும் போது, அவர்கள் செவி சாய்க்கின்றனர். ஜெபர்ஸன்வில்லைக் குறித்து நான் சிந்திக்கும் போது கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன்னைச் சேர்த்துக் கொள்ள மனதாய் இருந்தேன்; உனக்கோ மனதில்லாமற் போயிற்று. உன்னை நான் எத்தனை தரமோ ஒரு அழகிய பூந்தோட்டமாகச் செய்திருப்பேன். அப்பொழுது எல்லா தேசங்களிருந்தும் உன்னிடத்தில் ஆகாய விமானத்தில் பறந்து வந்திருப்பார்கள். ஆனால் உனக்கோ மனதில்லாமற் போயிற்று. பாருங்கள்-? பாருங்கள்-?
61. ஏரோது அந்த நாளில் எதை நினைவுகூர வேண்டியவனாய் இருப்பான்-? அவனுக்குக் கிடைத்த அந்த மகத்தான தருணத்தை. அவனோ அதைப் புறக்கணித்தான். எங்கேயோ ஓரிடத்தில் இழக்கப்பட்டவர்கள் சஞ்சரிக்கும் அந்த ஸ்தலத்தில் அவன் இன்றிரவு இருந்து கொண்டு, அவன் செய்த காரியத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டிருப்பான். இப்பொழுது காலதாமதமாகி விட்டது.
62. நமக்கும் அவ்வாறே சம்பவிக்க அனுமதிக்க வேண்டாம். இது தேவன் நம்மைச் சந்தித்து உள்ள நேரமாகும். கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நினைவு கூருவோமாக. எபி.13:8. ஆக்கினைக்கு உட்பட்டவர்கள் தங்கும் ஸ்தலத்திற்குச் செல்லும் வரை சமயத்தைத் தள்ளிப் போடாதீர்கள், ஏனெனில் அப்பொழுது தேவனுடைய சமூகத்திற்குப் போக முடியாத பரிமாணத்தில் நீங்கள் இருப்பீர்கள். இவ்வுலகில் உங்களுக்குத் தருணம் அளிக்கப்பட்டுள்ளது. உனக்கு அளிக்கப்பட்ட தருணத்தை நீ உதறித் தள்ளினாய் என்று, திகில் சூழ்ந்த அந்த ஸ்தலத்தில் நீ வருந்த நேரிடும். முக்கியமாக வாலிபர் இதைக் கவனிக்கவும் எல்லோரும் கவனம் செலுத்துங்கள்
63. ஏரோது அதற்கு முக்கியம் செலுத்தவில்லை. அவனுக்குக் கிடைக்கப் பெற்ற அந்த ஒரே தருணத்தின் போது, இயேசு, தொப்பியில் இருந்து முயலை வரவழைப்பது போன்ற ஜல வித்தை ஏதாவதொன்றைச் செய்து அவனுக்கு வேடிக்கை காட்ட வேண்டுமென்று அவன் விரும்பினான். வேறு விதமாகக் கூறினால், அவரை மந்திரவாதியாக அவன் கருதினான். "உன்னால் மந்திர வித்தை செய்ய முடியுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது செய், நான் பார்க்கட்டும்" என்றான் அவன்.
64. இதை நான் பயபக்தியோடு கூற விரும்புகிறேன். இக்காலத்தில் போதகர் என்று அழைக்கப்படுபவர்கள் எத்தனை முறை, 'பரிசுத்த ஆவியென்று ஒன்று இருக்குமானால்; ஆதியில் செய்தது போலவே பரிசுத்த ஆவி இப்பொழுதும் கிரியை செய்கிறது என்று நீ விசுவாசிப்பாயானால், நான், இன்னார் இன்னாரை. இந்த வயோதியரை, இந்த ஸ்திரீயை, உன்னிடம் கொண்டு வருகிறேன். அவர்களைச் சுகமாக்கு பார்க்கலாம்,'' என்று கூறி இருக்கின்றனர்-?
65. "நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும் படி செய்யும். நீர் தேவனுடைய குமாரனேயானால், உம்மைத் தலையில் அடித்தது யார் என்று சொல்லும்,'' என்று இயேசுவிடம் கேட்ட அதே ஆவி தான் இது என்று அவர்கள் சிறிதேனும் உணருகிறார்களா-? இல்லை. அவருடைய கண்களைத் துணியால் இறுக்க கட்டிவிட்டு, அவரைத் தலையிலடித்து, அந்தக் கோலை வேறொருவரின் கையில் கொடுத்து விட்டு, "நீர் தீர்க்கதரிசியானால் உம்மை அடித்தது யாரென்று சொல்லும், அப்பொழுது உம்மை விசுவாசிப்போம். நீர் தேவனுடைய குமாரனேயானால் எங்களுக்குச் சொல்லும். நீர் தேவனுடைய குமாரனேயானால், சிலுவையை விட்டு இறங்கி வாரும். அப்பொழுது நீரே தேவனுடைய குமாரனென்று நாங்கள் விசுவாசிப்போம்.' என்றனர்.
66. இன்றைக்கும் அநேகர் - ஆண்களும், பெண்களும், வாலிபரும், வயோதிபரும் அதே நிலையில் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய ஊற்றண்டையில், அவருடைய சமுகத்தில் நீங்கள் இருந்தீர்களென்றும், மாய ஜாலவித்தை காண நீங்கள் விரும்பினீர்கள் என்றும் ஒரு நாளிலே நினைவு கூருவீர்கள். "என் மெய் சிலிர்க்கும்படி அவர் இதை செய்யட்டும், அதை செய்யட்டும், அப்பொழுது நான் நம்புவேன்," என்று கூறுகின்றனர். பாருங்கள், உணர்ச்சியைத் தூண்டும் அத்தகைய செயல்கள் வெறும் விக்கிரகாராதனையே, அப்பொழுது நீங்கள்...
67. ஒருமுறை இயேசு இக்கேள்வியைக் கேட்டார், அதே கேள்வியை இன்றிரவு நான் சபையிடம் கேட்க விரும்புகிறேன். "என்னை ஆண்டவரே-! ஆண்டவரே-! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லிகிறபடி நீங்கள் செய்யாமற் போகிறதென்ன-? (லூக்.6:46), என்னை ஆண்டவரே-! என்று நீங்கள் சொல்லியும் என் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமற் போகிறதென்ன-? என்னை ஆண்டவரே-! என்று சொல்லியும், நான் பிரசங்கிக்கவும் போதிக்கவும் உங்களுக்குக் கட்டளை இட்டதை நீங்கள் மறுதலிக்கிறதென்ன-?'' என்று இயேசு கேட்டார். அது என்ன-? அது என்ன-? ஏனெனில் சில ஸ்தாபன பாரம்பரியங்கள் அவர்களுக்கும் தேவனுடைய வார்த்தைக்குமிடையே நின்றன, உங்களுக்கும் தேவனுக்கும் இடையே நிற்கும் எதுவும் விக்கிரகமாகும். அது தேவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறது. "நீங்கள் என்னை 'ஆண்டவரே' என்று ஏன் அழைக்கிறீர்கள்-?'' 'ஆண்டவர்' என்றால் 'உரிமையாளர் என்று அர்த்தம். ஆண்டவர் அந்த சொத்தின் உரிமையாளர்,' நான் தேவனுக்குச் சொந்தமாய் இருப்பேனானால்: நான் அவருடையவனாய் இருப்பேனானால், நான் தவறான பாதையில் சென்று கொண்டிருந்த போது, ஒரு நாள் அவர் என் பக்கம் திரும்பி, பேதுருவை அழைத்தது போல் அவர் என்னை ஒரு நோக்கத்திற்காக அழைத்த போது, அவருடைய வாஞ்சையை நிறைவேற்றுவதல்லாமல் வேறெதை நான் செய்ய முடியும்-? "என்னை ஆண்டவரே-! என்று ஏன் அழைக்கிறீர்கள்-?''
68. நான் வேறொரு மனிதனை இங்கு குறிப்பிட்டு, அவனைக் குறித்து சற்று பார்க்க விரும்புகிறேன். யூதாஸைக் குறித்தென்ன-? அவன் எதை நினைவு கூருவான்-? இப்பொழுது நாம் ஆண்டவரை நினைவு கூருதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், ஓ, யூதாஸ், இன்றிரவும், அவன் இல்லாமற் போகுமட்டும், தன் சேஷ்ட புத்திரபாகத்தை விற்று போட்டதைக் குறித்து சதா நினைத்துக் கொண்டு இருப்பான். அவன் இயேசுவைத் தன் சொந்த ஆதாயத்திற்காக விற்றுப் போட்டான். நாம் யூதாஸை ஏளனம் செய்கிறோம். அவன் மிகவும் பொல்லாதவன் என்றும், சமுதாயத்தில் எந்த இடத்தையும் பெறுவதற்கும் அவனுக்குத் தகுதியில்லை என்றும் நாம் கூறுகிறோம். ஏன்-? அவனுக்கு அப்போஸ்தலனாய் இருக்கத் தருணம் கிடைத்து இருந்தும், அவனுடைய ஆண்டவரை அவன் விற்றுப் போட்டான், அப்போஸ்தலனின் பதவி மிகவும் உன்னத அழைப்பாக வேதத்தில் கருதப்படுகிறது, தீர்க்கதரிசியின் அழைப்பைக் காட்டிலும் அது உன்னதமானது. அவனுக்கு அப்போஸ்தலனாய் இருக்கத் தருணம் வாய்த்தது. ஆயினும் அந்த உரிமையை அவன், தன் சொந்த ஆதாயத்திற்காக விற்றுப் போட்டான். இப்பொழுது யூதாஸ் அதை நினைவுகூர வேண்டியவனாய் இருக்கிறான். அப்படித் தான் அவன் இயேசுவை நினைவுகூர வேண்டும். சொந்த ஆதாயம்.
69. இன்றிரவு எத்தனை பேர் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டும், பாடகர் குழுக்களின் அங்கியை அணிந்து கொண்டும், மூப்பர்களின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டும், பொருளாளர், தர்மகர்த்தா போன்ற முக்கிய ஸ்தானத்தை வகித்துக் கொண்டும், அதே சமயத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தருணத்தை தங்கள் சொந்த புகழுக்காகவும், "டாக்டர் இன்னார் இன்னார், அல்லது பேராயர் இன்னார் இன்னார்'' என்று அழைக்கப்படுவதற்காகவும், சொந்த ஆதாயத்திற் காகவும் விற்றுப் போடுகின்றனர் என்பதை  நினைத்துப் பார்க்கிறேன்.
70. ஒருவர் ஒரு முறை என்னிடம், "இந்தச் செய்தி உண்மையென்று நான் நம்புகிறேன். ஆனால் அதை நான் பிரசங்கித்தால், தெருவில் பிச்சையெடுக்க நேரிடும்,'' என்றார்.
71. ஐசுவரியவானும் லாசருவும் உங்களுக்கு நினைவிருக்கிறதா-? அவர்கள் உடைய கடைசி கட்டம் - நித்திய கட்டம் எவ்வாறிருந்தது-? இவ்வுலகிலிருந்த போது ஒருவன் பிச்சைக்காரன், மற்றவன் ஐசுவரியவான். ஆனால் ஒரு நாள் அந்த காட்சி மாறினது. இருவரும் அதை நினைவு கூருவார்கள். யூதாஸ் இயேசுவைத் தன் சொந்த ஆதாயத்திற்காக விற்றுப் போட்டான் என்று ஜனங்கள் இன்று கூறுகின்றனர். ஆனால் அநேகர் இன்றைக்கும் அதையே செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அவரைத் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக விற்று விட்டனர்.
72. அக்காலத்திலிருந்த ஆசாரியர்களும், அவருடைய ஊழியக்காரராக, சீஷர்களாக, ஆகும் தருணத்தை இழந்து விட்டதை நினைவு கூர வேண்டிய வர்களாய் இருக்கின்றனர். அவர்கள் பொறாமை என்னும் விஷத்திற்கு அதை விற்றுப் போட்டனர். அவருடைய போதகத்தைக் குறித்து அவர்கள் பொறாமை கொண்டனர். ஏன்-? அவருடைய 12 வயதிலேயே அவர் அவர்களைத் திணற அடித்து விட்டார். அப்படி இருந்தும் கூட, அவர் தான் மேசியாவென்று, அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. அவர் செய்த கிரியைகளை அவர்களால் செய்ய முடியவில்லை. அவருடைய போதகங்களை ஏற்றுக் கொண்டால், உயர்ந்த நிலையில் உள்ளவர்களிடம் தங்கள் கீர்த்தியை இழந்து விடுவார்களோ என்று அவர்கள் பயந்தனர். அதன் விளைவாக அவர்கள் தங்களுக்குக் கிடைத்த தருணத்தை விற்றுப் போட்டனர். ஏரோது எவ்வளவு குற்றவாளியோ, இவர்களும் அவ்வளவு குற்றவாளிகளே.
73. இன்றுள்ள ஸ்தாபனங்களிலுள்ள அங்கத்தினனும் அதே நிலையில் இருக்கிறான். இயேசுவின் காலத்திலிருந்தவர்கள் தங்கள் ஸ்தாபனத்தின் மேல் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களுடைய புகழ் போய் விடுமோ என்று அவர்கள் பயந்தனர். இயேசுவின் போதகங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள நேரிட்டால், அவர்கள் ஜெப ஆலயங்களிலிருந்து புறம்பாக்கப்படுவார்கள். அது என்ன-? அது விக்கிரகாராதனை. அவர்களுக்கு முன்பாக வெளிப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் விக்கிரகமாகிய ஸ்தாபன கோட்பாடுகளையும், விக்கிரகமாகிய ஸ்தாபன மார்க்கத்தையும் வழிபடுகின்றனர்.
74. அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கண்டனர். "நாங்கள் ஜீவ வார்த்தையை எங்கள் கண்களினாலே கண்டோம், எங்கள் கைகளினாலே தொட்டிருக்கிறோம்.'' என்று வேதம் கூறுகின்றது (1யோவான்.1:1). வார்த்தையாக வெளிப்பட்ட அந்த ஜீவ வார்த்தையின் மேல் மனிதர் கைகளை வைத்து தொட்டுப் பார்த்தனர். அப்படியிருந்தும் அவர்களுடைய பாரம்பரியங்களும், கோட்பாடுகளும் - பாத்திரங்களைக் கழுவது போன்ற அசுத்தமான காரியங்கள்... அவர்களுக்கும்...
75. அது என்ன-? அவர்கள் அநியாயமான அபிப்பிராயம் கொண்டு இருந்தனர் (Prejudiced). அவருடைய சுத்தமான, தெளிவான சுவிசேஷ போதகங்களை பிதாவின் வார்த்தையை குறித்து அவர்கள் தப்பெண்ணம் கொண்டிருந்தனர். அவர் மேல் அவர்கள் பொறாமை கொண்டனர். அவர்கள் நரகத்துக்குச் செல்லும் போது, அவர்களுடைய நினைவு அந்நிலையிலும் மாறாதிருக்கும் என்பதால், இதைக் குறித்து அவர்கள் நினைவு கூர வேண்டியவர்களாய் உள்ளனர். அப்படித் தான் அவர்கள் இயேசுவை நினைவு கூரவேண்டும்.
"ஓ, பரிசேயர்கள் தான் அப்படிச் செய்தனர்,'' என்று நீங்கள் கூறலாம்
76. ஒரு ஸ்திரீ நமது சபைக்கு வருவது வழக்கம். உங்களில் அநேகருக்கு அவளைத் தெரியுமென்று நினைக்கிறேன். இந்த தெருவில் சற்று தொலைவில் அவள் வசிக்கிறாள், அவள் விழுந்து போனாள். ஒவ்வொரு முறையும் என்னைக் காணும் போதும், அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு. ''சகோ.பில், எனக்காக ஜெபியுங்கள். நான் பின்வாங்கிப் போனேன்," என்பாள், அவளுடைய கணவன் ஒரு... இல்லை, அவள் இந்த தெருவில் தான் வசிக்கிறாள், தேவனுடைய ஆவி அவள் மேல் இறங்கி, அவள் ஆவியில் நடனமாடி களி கூர்ந்ததை நான் கண்டிருக்கிறேன். அவள் இப்பொழுது பின்வாங்கிப் போய் விட்டாள். அண்மையில் அவள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அவள் மரித்து விடுவாள் என்று அவர்கள் கருதினர். அவளுக்காக ஜெபம் செய்யும்படி அவள் என்னை அழைத்திருந்தாள்.
77. அவளும் அவள் கணவனும் என் மனைவியிடம் ஒரு காலத்தில் மிகவும் அன்பாக நடந்து கொண்டவர்கள். என் மனைவி கந்தை உடுத்தி இருந்த சமயத்தில், அவள் பள்ளிக்குச் செல்வதற்காக அவர்கள் அவ்வப்போது ஆடைகளை வாங்கித் தருவது வழக்கம். அது எவ்வளவு சிறியதாய் இருப்பினும், நீ தேவனுக்காகச் செய்யும் ஒவ்வொன்றையும் அவர் நினைவு கூராமல் இருப்பதில்லை, "மிகவும் சிறியவராகிய இவர்களுக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்.'' (மத்.25:40). தண்ணீரின் மேல் போடப்பட்ட ஆகாரத்தைப் போல் அது திரும்ப வரும்.
78. பின்வாங்கிப் போன அந்த ஸ்திரீ அங்கு படுத்துக் கொண்டு, என் கையைப் பிடித்து அழத் தொடங்கினாள். நான், ''சகோதரியே, உனக்காக ஜெபிக்கப் போகிறேன்.'' என்றேன்.
79. அடுத்த படுக்கையில் ஒரு ஸ்திரீ கைகளை குறுக்கே வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மகன் அவளருகில் அமர்ந்திருந்தான். அவனுக்கு சுமார் 20 வயது இருக்கும். காண்பதற்கு அவன் நவீன 'ரிக்கியைப் போல் இருந்தான்.'
80. இங்கு யாராகிலும் ரிக்கி என்னும் பெயரைக் கொண்டு இருப்பார்களானால், அவர்களை அவமானப்படுத்துவாக எண்ண வேண்டாம். எல்விஸ், ரிக்கி போன்ற பெயர்களை நீங்கள் முன் காலங்களில் கேட்டு இருக்க முடியாது. அது இக்காலத்தின் பெயராக உள்ளது. உங்கள் குழந்தைக்கு அத்தகைய பெயரை நீங்கள் சூட்டியிருந்தால், அதன் நடுப் பெயரினால் அதை கூப்பிடுங்கள். இல்லையேல், வேறு பெயர் ஒன்றைச் சூட்டுங்கள்.
81. அடுத்த படுக்கையிலிருந்த அவள் எழுந்து உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்... நான் ஜெபத்திற்காக தலைவணங்கின போது, அவள் முகம் மாறுபட்டது. அவள் “சற்று பொறுங்கள், திரையைப் போடுங்கள்," என்றாள்.
82. நான் அவளிடம், ''அந்த ஸ்திரீக்கு ஜெபம் தானே செய்யப் போகிறேன்-! நீங்கள் விசுவாசி தானே," என்றேன். -
83. அவளோ, "நாங்கள் மெதோடிஸ்டுகள். ஆகவே திரையைப் போடுங்கள்,'' என்றாள்.
“சரி, அம்மா," என்று சொல்லி திரையைப் போட்டேன்.
84. அது தான் இன்று நடக்கிறது. அவர்கள் காரணமின்றி வெறுக்கின்றனர். நான் எப்படிப்பட்ட ஊழியக்காரன் என்று அவளுக்கு எப்படித் தெரியும்-? அவளை நான் முன்பு கண்டதே இல்லை. ஒருக்கால் யாராகிலும் அவளிடம், எனக்கு தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை உண்டு என்று சொல்லியிருப்பார்கள். அவள் அதற்கு விரோதமாக போதிக்கப்பட்டிருப்பாள். அதனுடன் யாதொரு சம்பந்தமும் கொள்ள விரும்பாமல், அவள் கையைக் கழுவினாள். அந்தப் பழி அவள் மீது விழுந்து விடுமோ என்று அவள் பயந்தாள். கவலைப்பட வேண்டாம். அது விழாது. பிலாத்தும் கூட அப்படித்தான் தன் கையைக் கழுவினான்.
85. மெதோடிஸ்டுகளை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. அந்த ஒரு ஸ்திரீ அப்படிச் செய்தாள். ஒருக்கால் அது அவளுடைய சுபாவமாயிருக்கக் கூடும். எல்லா மெதோடிஸ்டுகளும் அப்படி என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர்களில் அநேகருக்கு நான் ஜெபம் செய்து இருக்கிறேன். அவர்களுக்காக ஜெபிக்கும்படி அவர்கள் என்னை அழைத்து இருக்கின்றனர். அவர்கள் மத்தியில் அடையாளங்களும் அற்புதங்களும் நிகழ்ந்து உள்ளன. அந்த ஸ்தாபனத்திலுள்ள ஜனங்களல்ல. அந்த ஸ்தாபன முறை தான் அப்படிச் செய்யத் தூண்டுகிறது. இந்த ஸ்திரீ ஒரு விதமானவள். அது என்ன-? வெறும் பச்சை கண் விஷம் (green eyed jealousy). பிசாசு பிடித்த பொறாமை.
86. வேறொன்றைக் கூற விரும்புகிறேன். இந்த பட்டினத்தில் ஒரு சமயம் ஒரு கூட்டம் நடைபெற்றது. நான் ஏன் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழை க்கப்படவில்லை என்று ஜனங்கள் கேட்டனர். நான் அதை கூறாமல் விட்டு விடுவது நல்லது. ஏனெனில் இப்பொழுது என் சொந்த பட்டினத்தில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். எதுவாயினும், அதற்கு ஒரு காரணமும் இல்லை, வெறும் பொறாமையே. அது ஸ்தாபனக் கோட்பாடு, விக்கிரகாராதனை. நாம் எவ்வளவாக ஒருவர் மேல் ஒருவர் கைபோட்டு அளவளாவ விரும்புகிறோம்-! ஆனால் நாம் புறக்கணிக்கப்படும் போது.... இயேசுவும் அப்படியே செய்ய விரும்பினார். என்றாவது ஒரு நாளில் நீங்கள் அதை நினைவுகூர வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் அதை நினைத்துப் பார்க்கத் தான் வேண்டும்..
87. அண்மையில் அளிக்கப்பட்ட ஒரு சாட்சி என் நினைவுக்கு வருகிறது. ஹேபர்ன் கட்டிடத்தில் ஒரு போதகர் 'எலி-வேட்டரில்' மேலே போய்க் கொண்டு இருந்தார். அவருடன் மூன்று பேர் இருந்தனர். இவர் போதகர் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் எட்டாம் மாடியை அடைந்த போது அவர்களில் ஒருவன் அந்த போதகரிடம், "இது என்ன தெரியுமா-? நாம் பரலோகத்திற்கு இவ்வளவு அருகாமையில் மாத்திரமே வரமுடியும்'' என்றானாம்.
88. அதற்கு அந்த போதகர், ''நீ கூறுவது சரியே. நாம் நமது சொந்த தகுதியை நம்பி உள்ள வரைக்கும், பரலோகத்துக்கு இவ்வளவு அருகாமையில் தான் நாம் வரமுடியும்,'' என்றாராம். அது உண்மை. உங்கள் கிரியைகளை நீங்கள் நம்பி உள்ள வரைக்கும், நீங்கள் செய்ததையே நினைத்துப் பார்த்துக் கொண்டு இருப்பீர்கள். நாம் ஒன்றும் செய்யவில்லை என்றும், நாம் எதையும் பெற தகுதியற்றவர்கள் என்றும் நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம். அந்த போதகர், "நமது சொந்த தகுதியை நாம் நம்பி உள்ள வரைக்கும், பரலோகத்துக்கு இவ்வளவு அருகாமையில் தான் நாம் வரமுடியும்,'' என்றார்.
89. ஆனால் ஒன்றை இப்பொழுது கூற விரும்புகிறேன். நான் யாராயிருந்தேன் என்பதை மறந்துவிட்டு, அவர் யாராயிருக்கிறார் என்று மாத்திரம் நான் நினைவு கூர்ந்தால்-! இயேசுவையும், அவருடைய சிலுவை மரணத்தையும், அவர் எனக்கு செய்ததையும், என் பாவங்களை அவர், கழுவின அந்த நேரத்தையும், என்னை வழி நடத்த அவர் பரிசுத்த ஆவியை எனக்களித்ததையும் என்னால் நினைவுகூர முடிந்தால், என்னை இறுகப் பற்றியிருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக நான் உயர்த்தப்படுவேன். பூமிக்குரிய ஒவ்வொன்றிலிருந்தும் நான் விடுவிக்கப்பட்டு, உன்னதங்களிலுள்ள கிறிஸ்து இயேசுவிடம் நான் உயர்த்தப்பட்டு, அங்கு அவருடன் ஐக்கியங் கொள்ளுவேன். அங்கு அவருடைய சமுகத்தில், நான் யாராய் இருந்தேன் என்பதையும், என் பாவங்கள் போன்றவைகளையும் மறந்து விடுவேன். ஏனெனில் அவை மறதியின் கடலில் போடப்பட்டு விட்டன. என் முன் காலத்தை நான் மறந்து, எல்லாவற்றையும் நான் மறந்து, அவர் தமது மரணத்தின் மூலம் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார் என்பதை மாத்திரம் நினைவு கூருவேன். அவர் என் இடத்தை எடுத்துக் கொண்டார். நரகத்துக்குப் போவதைத் தவிர வேறு உரிமை எதுவும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அவரோ என் இடத்தை எடுத்துக் கொண்டு, பாதாளத்தில் இருந்து என்னைத் தூக்கி எடுத்து, எனக்குப் பதிலாக அவர் அங்கு சென்றார். அவருடைய அபரிமிதமான கிருபையினால் அவர் நம்மை உயர்த்தி, நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளாகும்படி செய்து, கிறிஸ்து இயேசுவுடன் கூட நாம் உன்னதங்களில் உட்கார்ந்து, களி கூர்ந்து, நம்மை அது வரைக்கும் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்த அவரை நினைவு கூரும்படி செய்தார். நமது ஆத்துமாக்களில் துடித்துக் கொண்டிருக்கும் விசுவாசம் நம்மை முன்னேறச் செய்வார் என்னும் விசுவாசத்தை நமக்களிக்கிறது.
90. "தேவன் எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார், எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்" (ரோமர் 8:20) என்னும் வேத வாக்கியம் நிறைவேறுகிறதை என் விசுவாசக் கண்களினால் காண்கிறேன். எனவே இதை நான் மனதில் கொண்டவனாய், நான் கூட்டத்தின் மத்தியில் நிற்கிறேன். அங்கு தேவனுடைய ஆவி இருந்து கொண்டு, நம்மை உயர்த்தி, கிறிஸ்து இயேசுவுக்குள் அவரோடு கூட உட்கார்ந்திருக்கும்படி செய்கிறது. என்றாகிலும் ஒரு நாளில் நிற்க வேண்டிய இருதயத் துடிப்பு கொண்ட இந்த அழிந்து போகக் கூடிய சரீரம் அழியாமையைத் தரித்துக் கொண்டு, நித்திய நித்திய காலமாய் துடித்துக் கொண்டு இருக்கும் ஆவியின் இருதயத்தைப் பெற்றதாய் வியாதி, துக்கம், முதுமை எதுவுமின்றி இருக்கப் போகும் அந்த நேரத்தை எதிர் நோக்கிக் கொண்டு இருக்கிறேன்.
91. இயேசுவை நினைவு கூருங்கள். உங்கள் பானை காலியாகி அதில் மாவு இல்லாத நேரத்தில், இயேசுவை நினைவு கூருங்கள். நீங்கள் பிழைக்கவே முடியாது என்று மருத்துவர் கூறும் போது, இயேசுவை நினைவு கூருங்கள். பிசாசு உங்களைச் சோதிக்கும் போது - ''சோதனைகள் நம்மை சூழ்ந்து நிற்கும் போது, அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரியுங்கள்,'' என்னும் பாட்டை கூட்டத்தின் முடிவில் நாம் பாடும் சமயத்தில், இயேசுவை நினைவுகூருங்கள்.
92. இயேசுவை நினைவு கூருங்கள். அவர் மறுபடியும் வரப் போகிறாரென்று நினைவு கூருங்கள். நம்மிடத்தினின்று எடுத்துக் கொள்ளப்பட்ட அதே இயேசுவானவர் எப்படி நம்முடைய கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார். அவர் தமது சொந்தமானவர்களுக்காக மறுபடியும் வருவார்.
93. இப்பொழுது நாம் தலைவணங்கி ஜெபம் செய்வோம். இந்த செய்தியை மனதில் கொண்டவர்களாய், அவர் உங்களை நினைவு கூரவேண்டுமென்று விரும்புகிறீர்களா-? அப்படியானால் உங்கள் கைகளையுயர்த்தி, 'ஆண்டவரே. என்னை நினைவு கூருவீராக,” என்று சொல்லுங்கள். "என் கண்ணீர் கீழே விழும் போது என்னை நினைவு கூரும்," என்று கவிஞன் கூறினது போல்.
94. எங்கள் மிகவும் பரிசுத்தமுள்ள பிதாவே, பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை நாங்கள் அதிகமாக உணர்ந்து ருசித்தோம். அவர் எங்களுக்கு ஜீவவசனத்தை எடுத்துக் காட்டினார். நாங்கள் குழியிலிருந்து தூக்கியெடுக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் கிருபையால், தேவனுடைய பிள்ளைகளாக வார்ப்பிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை நினைவு கூருகிறோம், - ஒரு மருத்துவர் என் முகத்தை நோக்கி, "இன்னும் சில நிமிடங்கள் மாத்திரமே உயிர் வாழ்வாய்" என்ற போது, நான் அவரை நினைவு கூர்ந்தேன். என் ஆத்துமா பாரப்பட்டு, நான் பீடத் தண்டையில் இரக்கத்திற்காக அழுது மன்றாடின போது, இயேசுவை நினைவு கூர்ந்தேன். அச்சமயம் பாரம் என்னை விட்டு நீங்கினதை நான் இப்பொழுதும் நினைவு கூருகிறேன். இயேசு என் பாரத்தைச் சுமந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு விசுப்பலகையின் (Bench) மேல் அமர்ந்து கொண்டு இலக்கை சுடுவதற்காக துப்பாக்கியை வைத்து குறி பார்த்துக் கொண்டிருக்கையில், சாத்தான், "இது தான் என் தருணம்," என்று எண்ணி இருக்கக்கூடும். அப்பொழுது துப்பாக்கி வெடித்து, துப்பாக்கி குழாயும் மற்ற பாகங்களும் எல்லாத் திசைகளிலும் சிதறின. என்னைச் சுற்றி அது வெடித்தது. நான் கால்களை உயர்த்த முயன்றேன். இரத்தம் என் உடலிலிருந்து வெளியேறத் தொடங்கினது. இயேசு என்னைக் காப்பாற்றினாரென்று நினைவு கூர்ந்தேன். மருத்துவர் என்னைப் பரிசோதித்து பார்த்துவிட்டு ஒரு சேதமும் ஏற்படாததைக் கண்டு, "ஒன்று மாத்திரம் நானறிவேன். கர்த்தர் அங்கு அமர்ந்திருந்து, தமது ஊழியனைப் பாதுகாத்தார். இல்லையேல் அவருடைய உடல் அத்தகைய வெடித்தலுக்கு சின்னாபின்னமாய் இருக்க வேண்டும்,'' என்று கூறினார். ஓ, தேவனே, அவையனைத்தையும் நாங்கள் எவ்வளவாக நினைவு கூருகிறோம்-!
95. இம்மானுவேலின் இரத்தக் குழாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த ஊற்றண்டைக்கு நாங்கள் வருகிறோம். ஆண்டவரே, எங்கள் அனைவரையும் இன்றிரவு ஆசீர்வதியும். கையை உயர்த்தின ஒவ்வொருவருடைய இருதயத்தில் குடிகொண்டு இருக்கும் நோக்கங்களை நீர் அறிவீர். அவர்களுடைய வாஞ்சையையும் தேவைகளையும் நீர் அறிந்து இருக்கிறீர். ஆண்டவரே, உமது ஊழியன் என்னும் நிலையில் நானும் அவர்களுடன் சேர்ந்து, இக்கூடாரத்தை விட்டு மேலே எழும்பி, மேகங்களையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் கடந்து, இப்பொழுது உமது சமுகத்தண்டையில் வருகிறோம். எனக்கு முன்னால் பொற்பீடம் இருப்பதையும், அதன் மேல் பலியாகக் கிடத்தப்பட்டிருக்கும் இயேசுவையும் நாங்கள் கண்டு, அவரை நினைவு கூருகிறோம். "என் நாமத்தில் நீங்கள் பிதாவைக் கேட்டுக் கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்கு அருளுவார்'' என்று இயேசு கூறியுள்ளார். ஆண்டவரே, எங்கள் விசுவாசம் ஒழிந்து போகாதிருப்பதாக. விசுவாசித்தால், நாங்கள் கேட்டுக் கொள்வதைப் பெற்றுக் கொள்வோம் என்று நினைவு கூரும்படி செய்யும். அதை நாங்கள் நிச்சயம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இயேசு மரித்தார் என்பதை நினைவுகூருகிறோம்.
96. ஆண்டவரே. எங்கள் கட்டிடத்தை நீர் விரிவுபடுத்துகிறதை நாங்கள் காண்கிறோம். நீர் தான் இதை எங்களுக்காகச் செய்தீர், எங்களுக்காக விரிவு படுத்தித் தந்தீர். ஆரம்பத்திலும் ஒரு சபைக் கட்டிடத்தை எங்களுக்குத் தந்ததும் நீரே. எங்கள் முயற்சிகளை நீர் ஆசிர்வதிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.
97. ஆண்டவரே, தாழ்மையுள்ள, அருமையான, விசுவாசமுள்ள உம்முடைய ஊழியனாகிய சகோ.நெவில்லுக்காக வேண்டிக் கொள்கிறோம். அவர் எந்த நிலையிலும் உமக்கு ஊழியஞ் செய்ய விருப்பம் கொண்டு உள்ளார் அது பின் ஆசனத்தில் அமருவதாய் இருந்தாலும், அது சபையிலுள்ள குப்பையை பெருக்குவதாய் இருந்தாலும், அவரை நீர் எந்த நிலையில் வைத்தாலும், உமக்கு ஒரு கருவியாக இருக்க அவர் விரும்புகிறார். அவரை ஆசிர்வதிக்க உம்மை வேண்டிக் கொள்கிறோம்.
98. ஆண்டவரே, நான் கடந்து வந்த இந்த பெரிய சோதனையில், தர்மகர்த்தாக்கள் என் சார்பில் நின்றனர். சபையும் எனக்காக ஜெபம் செய்தது. முடிவில் வெற்றி கிடைத்தது. ஓ தேவனே, அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். ஆண்டவரே, அவர்களையும் நான் நினைவு கூருகிறேன். நீரும் அவ்வாறே அவர்களை நினைவு கூருகிறீர் என்று நிச்சயம் அறிவேன்.
99. நீர் எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருந்து வருகிறதை நாங்கள் நினைவு கூருகிறோம். எங்களை நீர் விட்டு விலகுவதுமில்லை, எங்களைக் கைவிடுவதும் இல்லை என்னும் உம்முடைய வார்த்தையை நாங்கள் நினைவு கூருகிறோம். அதற்கும் வயோதிபத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை, உலகம் இல்லாமல் போய், காலம் நித்தியத்திற்குள் சென்றாலும் நீர் எங்களை நினைவு கூருவீர். "ஸ்திரீயானவள் தன் பாலகனை மறப்பாளோ-? நான் உன்னை மறப்பதில்லை, இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்,'' (ஏசா. 49; 15-16) என்று எழுதியிருக்கிறதே. உமது கைகளில் கடாவப்பட்ட ஆணி எங்கள் பெயரை வரைந்தது, ஆண்டவரே, எங்களை நீர் நினைவுகூருகிறீர் என்று நாங்கள் அறிவோம்.
100. ஆண்டவரே, நீரே எங்கள் இரட்சகர் . எங்கள் பரிகாரி, எங்கள் ராஜா , எங்கள் அன்பர், எங்கள் ஜீவன், எங்கள் வெளிச்சம். எங்களுக்கு எல்லாவற்றிற்கும் எல்லாம், விழுந்து போன ஆதாமின் சந்ததிக்கு நீரே வற்றாத தேவனுடைய கிருபையும் அன்பும் நிறைந்த ஊற்று என்பது எப்பொழுதும் எங்கள் நினைவில் இருக்க அருள்புரியும். இப்பொழுது எங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். இன்றிரவு நாங்கள் கூடாரத்தை விட்டுச் செல்லும் போது, நாங்கள் இயேசுவை நினைவு கூரச் செய்யும். ஆமென்.
101. நீங்கள் அவரை நினைவுகூருகிறீர்களா-? அவரை நேசிக்கிறீர்களா-? "நாம் எதைச் செய்தாலும், அதை ஆவியில் செய்ய வேண்டும்,'' என்று பவுல் கூறி உள்ளான், எல்லவாற்றிலும் அவரை நாம் நினைவுகூர வேண்டும். ஏனெனில் அவரை நினைவு கூர்ந்து செய்யும் எதுவும் ஞானம் உள்ளதாயிருக்கும். நம் சத்துரு நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனை நாம் மறுபடியும் அறைவதற்கு முன்பாக, அவர் இத்தகைய ஓர் சந்தர்ப்பத்தில் என்ன செய்தார் என்பதை நினைவுகூரக்கடவோம். அவருடைய செயலை நாம் நினைவு கூருவோம். ஒரு தீர்மானத்தை நாம் செய்வதற்த முன்னால், அவர் இந்த விஷயத்தில் என்ன தீர்மானம் எடுத்திருப்பார் என்று ஆலோசனை செய்து, பின்னர் அந்த தீர்மானத்தைச் செய்வோம். நாம் அவசரப்பட்டால், அவர் ஒரு போதும் அவசரப்பட்டதில்லை என்று நினைவு கூருவோம். பாருங்கள். நாம் எதைக் குறித்தும் அதிக கவலை கொள்ள நேரிட்டால், அவர் நித்தியத்தில் இருக்கிறாரென்றும், காலம் என்பது அவருக்கு ஒன்றுமில்லை என்றும் நினைவு கூருங்கள். நமது இருதயத்தின் நோக்கமும் குறிக்கோளும் முக்கியமானது. அவரை நாம் நினைவு கூருவோம்.
102, நேசிக்கிறேன்" என்னும் பாடலை அவருடைய ஆவியின் பிரசன்னத்தில் இப்பொழுது நாம் பாடும் போது, அவரை நாம் நினைவு கூருவோமாக. நீங்கள் அன்பில் நிலத்திருந்தால், தேவன் உங்களில் நிலைத்திருக்கிறார். ஏனெனில் தேவன் அன்பாய் இருக்கிறார். தேவனில் நிலைத்திருப்பவர்கள் அவரில் நிலைத்திருக்கின்றனர். அன்புக்கு வெறுப்பில்லை. அன்புக்கு பொறாமையில்லை. அன்புக்கு பெருமையில்லை, அன்பு தவறாக நடந்து கொள்வதில்லை, அன்பு எப்பொழுதும் மிருதுவாயும், இனிமையாயும், மன்னிக்கிறதாயும். தயவாயும் உள்ளது. மற்றவர்கள் எவ்வளவு கசப்பாக நடந்து கொண்டாலும், அன்பு மாறாததாய் இருக்கும். அன்பு என்பது நமக்கு கிருபையின் முடிவாகும். எல்லா வரங்களும்  தீர்க்கதரிசனங்களும், பாஷை பேசுதலும், வியாக்கியானம் செய்தாலும் மற்றெல்லாம் ஒழிந்த  பின்பும், அன்பு வரும் போது, அதுவே முடிவாகும். அது எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளது. ஏனெனில் மற்றெல்லாம் தவறிப்போம். அன்பே உயர் நீதிமன்றத்தின் தீர்மானமாயுள்ளது. அது கட்டப்படும் கம்பம் அது மாலுமிகள் திசையறிந்து கொள்ளும் வடதுருவ நட்சத்திரம். நம்மை வழி நடத்தும் திசைக்காட்டும் கருவி அதுவே. அன்பே. எல்லாவற்றிற்கும் முடிவாய் உள்ளது. "அவரை நான் நேசிக்கிறேன்," என்று நாம் பாடும் போது, அதை நினைவு கூரக்கடவோம்.
நேசிக்கிறேன், நேசிக்கிறேன் 
முந்தி அவர் நேசித்ததால் 
சம்பாதித்தார் என் இரட்சிப்பை 
கல்வாரி மரத்தில் 
நேசிக்கிறேன். நேசிக்கிறேன் 
முந்தி அவர்... (அவர் நம்மை நேசித்து அவருடைய குமாரனைத் தந்தார் என்பதை நினைவு கூருங்கள்)
சம்பாதித்தார் என் இரட்சிப்பை
கல்வாரி மரத்தில் 
103. இப்பொழுது சகோதரி இந்தப் பாடலுக்கு சுருதி கொடுக்கும் போது (சகோ. பிரான்ஹாம் 'நேசிக்கிறேன்' என்னும் பாடலை மௌனமாக இசைக்கிறார்-ஆசி), நாம் இனிய ஐக்கியங் கொண்டவர்களாய், கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் அவருடன் கூட உட்கார்ந்திருக்கும் போது, நமது இருதயங்களிலிருந்து எல்லா கசப்பையும் எடுத்துப் போடுவோம். ஏனெனில் தேவனுடைய வார்த்தை அவ்விதம் கூறியுள்ளது. நாம் வேறொருவருடன் கைகுலுக்கி, "கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக, சகோதரனே'' என்று கூறுவோம். உங்களுக்கு விரோதி யாராகிலும் இருந்தால், எழுந்து போய் அவரைச் சந்தித்து, "கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக, சகோதரனே," என்று கூறுங்கள். மறுபடியுமாக இந்த பாடலை நாம் பாடும் போது, இனிமையான ஆவி கொண்டவர்களாய், ஒருவரோடொருவர் கைகுலுக்குங்கள். அப்படி செய்வீர்களா-?
நேசிக்கிறேன், நேசிக்கிறேன் 
முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் 
என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில்
(சகோ. பிரான்ஹாம் கைகுலுக்குகிறார் - ஆசி) நமது கரங்களை உயர்த்தி நாம் பாடுவோம்:
நேசிக்கிறேன் , நேசிக்கிறேன் 
முந்தி அவர்... (இயேசுவை நினைவுகூருங்கள்) 
சம்பாதித்தார் என் இரட்சிப்பை
கல்வாரி மரத்தில் 
104, இப்பொழுது நாம் தலை வணங்கி, இப்பாட்டை மௌனமாக இசைப்போம் (சகோ.பிரான்ஹம் 'நேசிக்கிறேன்' என்னும் பாடலை மௌனமாக இசைக்கத் தொடங்குகிறார் - ஆசி). இயேசுவை நினைவுகூருங்கள்-! (சகோ.பிரான்ஹாம் தொடர்ந்து மௌனமாக இசைக்கிறார்) 
"முந்தி அவர் நேசித்ததால்," 
(சகோ பிரான்ஹாம் தொடர்ந்து மௌனமாக இசைக்கிறார்). 
"கல்வாரி மரத்தில்.''
105. நமது சகோதரி இப்பாடலை இனிமையாக மிருதுவாக வாசிக்கும் போது, நமது அருமை சகோ.நெவில்லை நான் கேட்கப் போகிறேன்... சகோ.நெவில், நீங்கள் சொல்ல விரும்பும் ஏதாகிலும் உண்டா-? பின்னால் அமர்ந்து உள்ள நமது கூட்டாளியும், உத்தமும், அருமையுமான நமது சகோ.காலின்ஸ் ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப் போகிறேன். நாம் தலை வணங்கி இருக்கும் போது, சகோ.காலின்ஸ் 
(சகோ. காலின்ஸ் ஜெபம் செய்கிறார்-ஆசி). - ஆசி)